2010ம் ஆண்டில் மாத்திரம் பல்கலைக்கழக மாணவர்கள் 509 பேருக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க இன்று பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களான அநுரகுமார திஸாநாயக்க மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
இவ்வாறு வகுப்புத் தடை விதிக்கப்பட்டவர்களில் 159 பேர் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் என அமைச்சர் கூறியுள்ளார்.
அத்துடன் 2010ம் ஆண்டில் பல்கலைக்கழக மாணவர்கள் ஐவர் சிறை வைக்கப்பட்டதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க குறிப்பிட்டார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக