வெள்ளி, 29 ஜூலை, 2011

டக்ளஸ் தேவானந்தா ஆலயங்களில் வழிபடுவதை கொச்சைப்படுத்தி தமிழ் சிஎன்என்

 புலம்பெயர்ந்த நாடுகளில் தற்போது இணையத்தளங்களில் பரப்புரைகளை முடுக்கி விடுவதற்கு முண்டியடித்துக் கொண்டு இருப்பவர்களுக்கு தாம் என்ன செய்கின்றோம் எந்தவகையில் செய்திகளை வெளியிடுகின்றோம் என்ற தாற்பரியங்களே தெரியாமல் ஊடகபரப்புரைக்காக வரிந்து கட்டிக்கொண்டு இணையத்தளங்களை நடத்தி வருகின்றார்கள். இந்த வகையில் தமிழ் சிஎன்என் இணையத்தளமும் உள்ளடங்குகின்றது. முள்ளிவாய்க்காலில் எமது மக்களின் மூச்சுக்களை நிறுத்திய பெருமையும் இவர்களையே சாரும்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்களின் நடவடிக்கைகளை புலிகளின் பார்வையிலேயே விமர்சிப்பதில் கைதேர்ந்தவர்கள் இவர்கள். பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா இந்து ஆலயங்களில் வழிபடுவதை கொச்சைப்படுத்தி தமிழ் சிஎன்என் இணையத்தள செய்திச் சேவை செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளதுவிடுதலைப் புலிகள் இறுதியுத்த வேளையில் தமது இருப்பைக் காத்துக் கொள்ள சரித்திர பிரபலம் வாய்ந்த யாத்திரைத் தலமான மருதமடுத் திருப்பதில் எழுந்தருளியிருந்த மருதமடு அன்னையின் திருச்சொரூபத்தையே நகர்த்தியிருந்தமை பலரது மனதில் இன்றும் மாறாத வடுவாக அமைந்திருக்கின்றது. பிழையான ஒரு நோக்கத்திற்காக மருதமடுஅன்னையின் இருப்பையே மாற்றத் துணிந்ததன் விளைவு விடுதலைப் புலிகளின் முடிவாக இறைவனால் தீர்ப்பு எழுதப்பட்டதாகவும் பேசப்படுகின்றது. தெய்வம் நின்று கொன்றது விடுதலைப் புலிகளின் தலைவரையும் அவர் சார்ந்தவர்களையுமே தான்.
விடுதலைப் புலிகள் 12 தடவைகள் கொல்ல நினைத்த அமைச்சரை தெய்வம் காத்து வைத்துள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை இங்கு சிஎன்என்என் இன் கருத்துப்படி பார்த்தால் கூட அமைச்சர் இந்து ஆலயங்களை நாடி வழிபட்டு அங்குள்ள தெய்வ விக்கிரகங்களை தன் தோளில் சுமந்து தெய்வங்கள் முன்னிலையில் மனிதனாக தன்னைத் தாழ்த்தி நின்றாரே தவிர ஆணவம் கொண்டு வழிபாட்டுத் தலங்களையோ தெய்வ விக்கிரகங்களையோ சீர்குலைக்கவில்லை.
ஒரு மனிதனின் தெய்வவழிபாட்டையே கொச்சைப்படுத்தும் அளவுக்கு புலம்பெயர் புலிப்பரப்புரைகள் விரிந்து செல்லும் பாதைகள் இன்னுமொரு அழிவுக்கே வித்திடும். ஆனால் இனியும் ஒரு அழிவுக்கு அங்குள்ள எமது மக்கள்  தயாரில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக