செவ்வாய், 12 ஜூலை, 2011

யாழில் சாதாரணமான ஒரு சூழல் - சுசில் பேச்சு வடக்கு

வடக்கு வசந்தமாகவே உள்ளதாம் - சுசில் பேச்சு
தமிழ் அரசியல் கட்சிகள் உட்பட சில குழுக்கள் யாழ்ப்பாணத்தில் அசாதாரண சூழல் நிலவுவதாக தெரிவிக்கின்ற போதிலும் யாழில் சாதாரணமான ஒரு சூழல் காணப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

அண்மையில் தான் யாழ்ப்பாணத்துக்கு சென்று பார்த்த போது அங்கு சாதாரணமானதும் அமைதியானதுமான சூழல் காணப்பட்டதாக கனியவளத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தோல்வியை எதிர்கொள்ளும் நிலைப்பாட்டில் உள்ள ஒருசில கட்சியினரே இவ்வாறு சுதந்திரம் இல்லை என தெரிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக