வியாழன், 28 ஜூலை, 2011

தேவேந்திரமுனை நடை பயணம் பருத்தித்துறை வெளிச்சவீட்டையடைந்தது

யாழ். சிறுவர் புற்றுநோய் வைத்தியசாலை நிதி சேகரிப்பு

யாழ். நகரில் சிறுவர் புற்றுநோய் ஆஸ்பத்திரி ஒன்றை அமைப்பதற்கு நிதி சேகரிப்பதற்காக தேவேந்திரமுனையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நடை பயணம் தனது இறுதி இலக்கான பருத்தித்துறை வெளிச்சவீட்டை இன்று சென்றடைகிறது. இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் குமார் சங்கக்கார உட்பட முன்னணி வீரர்கள் பலரும் கலந்து கொண்டுள்ள இந் நடை பயண இறுதி நிகழ்வில்இளைஞர்களுக்கான நாளையஅமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்ஷ எம். பி. யும் கலந்து கொள்ளவுள்ளார். இந்த நடைப்பயணக் குழுவினர் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை அடைந்தனர். இக் குழுவினருக்கு மக்கள் கூடியிருந்து வரவேற்பளித்தனர்.
யாழ். போதனா வைத்தியசாலையில் சிறுவர் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை அமைப்பதற்கென 200 மில்லியன் ரூபாவை திரட்டும் வகையில் இம்மாதம் முதலாம் திகதி மாத்தறை தேவேந்திரமுனையிலிருந்து நடை பயணம் ஆரம்பமானது. இவர்களுக்கு ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். இவர் கள் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் வல்லை பகுதியை அடைந்தனர். இதுவரை தமது இலக்கில் 130 மில்லியன் ரூபாவை திரட்டியிருப் பதாக அவர்கள் கூறுகின்றனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக் கார, இலங்கை குத்துச் சண்டை வீரர் மஞ்சு வன்னியாராச்சி உட்பட பலர் இந்நடை பயணத்தில் இணை ந்து கொண்டுள்ளனர்.
நேற்று முன்தினம் அதிகாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தி யசாலை முன்றலில் இருந்து தமது பயணத்தை ஆரம்பித்த அணியினர் குழாமில் இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரவும் இணைந்து கொண்டு தமது பயணத்தை மேற் கொண்டார். வழி நெடுகிலும் பொதுமக்கள் நின்று தமது ஆத ரவைத் தெரிவித்ததுடன் நடைபாதை அணியின ருக்கு மலர் மாலைகள் அணிவித்து கெளரவித்தனர்.
டை பாதையாக புத்தூர் சந்தியை வந்தடைந்த போது மக்கள் நிறை குடம் வைத்து மலர்மாலைகள் அணிவித்தும் சிற்றுண்டிகள், குளிர் பானங்கள் வழங்கியும் நடை பாதை அணியினரை வரவேற்று உற்சாக மளித்தார்கள். இவர்கள் இன்று அதிகாலை இலக்கை அடையவுள் ளனர். அதிகாலையில் வல்லையில் இருந்து புறப்பட்டு பருத்தித்துறை வெளிச்ச வீட்டை அடையவுள்ளனர்.
தமது இலக்கை அடைந்த பின்னர் நடை பாதைப் பயணத்தில் தொடர்ந்து கலந்து கொண்டவர்கள் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் நிகழ் வில் பாராட்டி கெளரவிக்கப்படவு ள்ளார்கள்.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் இளைஞர் அணியின் தலைவருமான நாமல் ராஜபக்ஷ வும் கலந்து கொள்ளவுள்ளார்.
பிற்பகல் 4 மணிக்கு தெல்லி ப்பளை புற்று நோய் வைத்திய சாலையில் இடம் பெறும் புற்று நோயாளர்களுக்கான விடுதி அமை ப்பதற்கான அத்திவாரம் இடும் நிகழ்விலும் நடைபாதை அணி யினர் கலந்து கொள்ளவுள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக