நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter

சனி, 30 ஜூலை, 2011

ஆசிரியர் அடித்து மாணவன் கொலை, காட்டுமிராண்டித்தனமாக அடிப்பது

ஆசிரியர் அடித்து மாணவன் கொலை! போராடிய தோழர்கள் கைது!தி.மு.க பிரமுகர் – பினாமியான சாமிக்கண்ணு என்பவருக்கு சொந்தமான ஏழுமலை தொழில் நுட்பக் கல்லூரி விழுப்புரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இக்கல்லூரியில் புதுச்சேரியைச் சேர்ந்த பிரபாகரன் வயது 19, ஆட்டோமொபைல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இவரது வகுப்பாசிரியராக பணியாற்றும் குணசேகரன் தொட்டதுக்கெல்லாம் மாணவர்களை காட்டுமிராண்டித்தனமாக அடிப்பது வழக்கம். அப்படித்தான் 27.7.2011 அன்று கேள்வி கேட்டு பதில் சொல்லவில்லை என்று பிரபாகரனை பளார் என கன்னத்திலும், தலையிலும், கழுத்திலும், வயிற்றிலும் ஆத்திரம் தீர அடித்திருக்கிறார்.
ஆசிரியர் அடித்து மாணவன் கொலை! போராடிய தோழர்கள் கைது!அடிபட்ட வலி தாங்காமல் கண் இருட்டி விழுந்த மாணவனின் மூக்கிலிருந்து இரத்தம் வழிந்தது கண்டு சக மாணவர்கள் அதிர்ச்சியில் சத்தம் போடத் துவங்கினர். பதறிய நிர்வாகம் உடனே மாணவர் பிரபாகரனை சிகிச்சைக்கு கொண்டு செல்வதாக சமதானப்படுத்த முயன்றது. ஆனால் மாணவனைத் தூக்கும்போதே அவன் இறந்து விட்டான் என்பதைத் தெரிந்து கொண்ட மாணவர்கள் முழு கல்லூரியையும் அணிதிரட்டி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர்.
நிர்வாகமோ மாணவன் பிரபாகரன் வலிப்பு வந்து இறந்து விட்டதாகவும் பின்னர் அவன் சாகவில்லை என்று சொல்லியும் கதை கட்டி போராட்டத்தை முடிக்க நினைத்தது. இந்நிலையில் இப்பகுதியில் செயல்பட்டு வரும் பு.மா.இ.மு தோழர்கள் தலையீட்டின் பேரில் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.
ஆசிரியர் அடித்து மாணவன் கொலை! போராடிய தோழர்கள் கைது!சுமார் 2 மணிநேரம் நடந்த சாலை மறியலால் போக்கு வரத்து முற்றிலும் முடங்கியது. போலீசும் போக்குவரத்தை மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டது. பின்னர் ஏராளமான போலீசாரைக் கொண்டு சாலையில் இருந்த மாணவர்களை தடியடி நடத்தி பலரை காயப்படுத்தி விரட்டினார்கள். போராட்டத்திற்கு தலைமை தாங்கிய பு.மா.இ.மு தோழர்கள் எட்டு பேரை பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்திருக்கிறது.
இந்த கைது வழக்கிற்கு அஞ்சாமல் பு.மா.இ.முவும் மாணவர்களும் நீதி கிடைக்கும் வரை போராடுவதாக உறுதி பூண்டிருக்கிறார்கள். இதற்கு முன்னோட்டமாக ஆசிரியர் குணசேகரன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.


பகிர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

‹
›
முகப்பு
வலையில் காட்டு
Blogger இயக்குவது.