சனி, 30 ஜூலை, 2011

கல்வி வெற்றிகரமான வியாபாரம் குழப்பத்தின் உச்சம்!


கல்வி வியாபாரமாகி பல வருடங்களாகி விட்டது. எப்போது அது ஒரு என்றாகியதோ அப்போதே அதில் அரசியலும் புகுந்து விட்டது. ஆமை புகுந்த வீடும் அரசியல்வாதி புகுந்த தொழிலும் உருப்பட்டதாக சரித்திரம், பூகோளம் எதுவுமில்லை. இன்றைய தேதியில் அரசியல்வாதிகள் நேரடியாக புகாத தொழில் ஆன்மீகம் தான்! அதனால் தான் ஆன்மீகவாதிகளை அரசியல்வாதிகளாக்க முயன்று ஒருவாறு வெற்றியும் பெற்று வருகிறார்கள். சமச்சீர் கல்வித்திட்டத்தில் அரசு தவறான முறையைப் பின்பற்றி விட்டது என்று அரசு வழக்கறிஞரே கோர்ட்டில் அந்தர் பல்டி அடித்து அதிர்வலைகளைக் கிளப்பியிருக்கிறார். சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அறிமுகப்படுத்த வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ள போதும், “சரி” என்று அரசிடமிருந்து சாதகமான பதில் இன்னமும் வரவில்லை. இந்நிலையில் இது தான் சாக்கு என்று மக்களால் புறக்கணிக்கப்பட்ட சில அரசியல் சக்திகள் மாணவர்களைத் தூண்டும் வேலைகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளன. ஆங்காங்கே மாணவர்களை போராட்டங்களில் ஈடுபடச் செய்துள்ளார்கள். வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்திருகிறார்கள். இன்றைய தேதியின் இவ்வளவு பிரச்னைக்கும் இந்த தீய சக்திகள் தான் முதல் காரணம். முதலில் இவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் முதல்வர். மாணவர்களிடம் அரசியலைப் புகுத்தக் கூடாது. ஏற்கனவே பலரும் சொல்லியிருந்தபடி இப்போதைக்கு சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்தி விட்டு அடுத்த கல்வியாண்டின் போது பாடங்களை எப்படி தரமானதாக்கலாம் என்று யோசிக்கலாம்.
சில தனியார் பள்ளிகளில் சமச்சீர் கல்வி வந்தாலும் தாங்கள் தனியாக சில புத்தகங்களையும் மாணவர்களுக்கு வழங்கப் போகிறோம் என்று சொல்லி வருகிறார்கள்.
குழப்பத்தின் உச்சம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக