செவ்வாய், 12 ஜூலை, 2011

விருப்பு, வெறுப்பு காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது: திருமா

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்,
தமிழகத்தில் சமச்சீர் கல்வி திட்டத்தை நடைமுறைப்படுத்த மனமில்லாத நிலையில் தரமில்லாத கல்வி என அதனை காரணம் சொல்லி தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொலைநோக்கு பார்வையுடன் கூடிய புரட்சிகரமான திட்டம் சமச்சீர் கல்வி திட்டம். மக்களுக்கான திட்டம் என்ற பார்வை இல்லாமல், திமுக அரசின் திட்டம் என்று கருதி, தமிழக அரசு தவிர்த்து வருவது வேதனை அளிக்கிறது. இரண்டு தனிப்பட்ட நபர்களுக்கிடையேயான விருப்பு, வெறுப்பு காரணமாக இரண்டு மாத காலம் பள்ளி குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான பள்ளி குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதற்கு காரணமான தமிழக அரசு இருப்பது வேதனைக்குறியது.

பணக்காரர் குழந்தைகளும், ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளும் சமமான கல்வியை பெறுவதை தமிழக அரசு விரும்பவில்லை என்று எண்ணத்தோன்றுகிறது. சமமான கட்டமைப்பு வசதியுடைய பள்ளிக்கூடங்களை உருவாக்குவதும், சமமான பாடத்திட்டங்களை உருவாக்குவதே சமச்சீர் கல்வியின் நோக்கமாகும்.

மரத்தடியில் வகுப்புகள் நடக்கின்றன. எத்தனையோ பள்ளிகளில் ஆய்வங்கள் வசதி இல்லை. கழிப்பிட வசதி இல்லை. போதிய ஆசிரியர்கள் இல்லை. சமச்சீர் கல்வியின் முக்கியமான நோக்கம் சமமான் கல்வி, சமமான கட்டமைப்பு வசதி ஆகியவற்றை உருவாக்குவது.

புதிய தலைமுறையை சமத்துவ சிந்தனையோடு வளக்கிற ஒரு கல்வித் திட்டமாகும். இந்த கொள்கையின் அடிப்பûயில் தமிழக அரசு மாறுபடுவதாக நான் கருதுகிறேன். திமுக அரசு கொண்டு வந்த திட்டம் என்பதற்காக மட்டுமல்லாமல் அந்த கொள்கையின் அடிப்படையிலேயே தமிழக அரசுக்கு மாறுபாடான எண்ணம் இருக்கிறது.

எல்லா வகுப்பினருக்கும் சமமான கல்வி வழங்குவதில் இன்றைய தமிழக அரசுக்கு உடன்பாடு இல்லையோ என்ற எண்ணம் தோன்றுகிறது. சமத்துவமான புதிய தலைமுறையை உருவாக்குவதற்கு தமிழக அரசுக்கு உடன்பாடு இல்லையோ என்று கருத தோன்றுகிறது. பெருந்தன்மையோடு இந்த பிரச்சனையை தமிழக அரசு அனுக வேண்டும். இது மக்களுக்கான திட்டம். இது மக்களுக்கு வரலாற்று தேவை.

தமிழக அரசு அறிவித்துள்ள இலவச திட்டங்களை விடுதலைச் சிறுத்தைகள் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. திமுக ஆட்சியின் போதும் நாங்கள் இதையேதான் வலியுறுத்தினோம். இப்போதும் நாங்கள் இதை வலியுறுத்துகிறோம். இலவச திட்டங்கள் அனைத்தையும் கைவிட்டு, கல்வியை மட்டும் இலவசமாக வழங்க வேண்டும். அரசு நினைத்தால் கல்வியை இலவசமாக வழங்க முடியும்.

வணிக பொருளாக கல்வி மாறியிருக்கிறது. இது ஒரு ஆரோக்கியமான புதிய சமுதாயத்தை உருவாக்குவதற்கான அடையாளம் இல்லை. மதிப்பெண் வாக்குகிற மாணவர்கள் கூட அதிகமாக பணம் கொடுத்தால்தான் மருத்துவ கல்வியும், பொறியியல் கல்வியும் கற்க முடியும் என்கிற நிலை தமிழகத்தில் நிலவுவது ஆபத்தானது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக