திங்கள், 18 ஜூலை, 2011

பிணங்கள்மீது சவாரிசெய்த முன்னாள் பயங்கரவாதி அரியநேந்திரன்

எனது மகளை சிறுத்தை கடித்து இழுத்ததை நான் நேரில் கண்டேன் அரியநேந்திரனின் இராணுவம் மீதான குற்றச்சாட்டு அபாண்டம்


மரணித்த மனிதர்களின் பிணங்கள்மீது சவாரிசெய்த முன்னாள் பயங்கரவாதி அரியநேந்திரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினரும், விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுததாரியுமான அரியநேந்திரன் கதிர்காமத்திற்கு கால் நடையாகப் பயணஞ்செய்த பெண்மணி வருவரை இராணுவத்தினர் கற்பழித்து கொலை செய்ததாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார். அவ்வறிக்கையினை பிரித்தானியாவை தளமாகக் கெண்டு இயங்கும் (GTV)யும் தனது செய்தியில் முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பியது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட பெண்ணின் தந்தையார் இடம்பெற்ற உண்மையினை பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
சிறுத்தை கடித்து இழுத்ததை நான் மட்டுமல்ல; ஆயிரக் கணக்கானோர் கண்டுள்ளனர். உண்மை இவ்வாறிருக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பியான அரிய நேந்திரன் சுமத்தும் குற்றச்சாட்டு அபாண்டமானது’.இவ்வாறு கதிர்காமப் பாதயாத்திரையின் போது சிறுத்தை கடித்து உயிரிழந்த தம்பிலுவில் பெண்ணின் தந்தையார் பொன்னையா கிருஷ்ணபிள்ளை (57 வயது) கண்ணீர் சிந்தியவாறு கூறினார்.
அன்பு மகளை இழந்து ஆறாத்துயரில் துடி துடித்துக்கொண்டிருக்கையில் எம்மீது அபாண்டமான பழியைச் சுமத்தி வரலாற்று ரீதியான வடுவை ஏற்படுத்தியுள்ளார் அரியநேந்திரன் எம்.பி. இவர்கள் தானா எமது தமிழினத்தின் காவலர்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.தனது மகள் இராணுவத்தினால் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்றும் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக கூறியுள்ளார். இது அப்பட்டமான பொய். பெற்ற தகப்பனாகிய நான் கூடச் சென்று நேரடியாக சிறுத்தையைக் கண்டேன். என்னைவிட வேறெந்த உறவினர் இவரிடம் சந்தேகம் தெரிவித்தது? சம்பவம் பற்றி அவர் கூறியதாவது எனக்கு 4 பிள்ளைகள்.
அவர்களில் மூத்தவர் சந்திரகுமாரி. அவர் ஒரு பட்டதாரி. அக்கரைப்பற்று வலயக்கல்வி காரியாலயத்தில் பணி செய்கிறார். அவரது கணவர் அதாவது எனது மருமகன் முத்தையா சாந்தசிறி. அவர் சமுர்த்தியில் வேலை செய்தவர். கடந்த வருடம் நடந்த விபத்தில் சிக்கி இடுப்புக்கு கீழே செயலிழந்த நிலையில் படுத்த படுக்கையாகவுள்ளார்.
மகளுக்கு அனுஷா என்ற 8 மாதக் குழந்தையும், குமாரகவி என்ற 5 வயது மகனும் உண்டு.நான் எனது குடும்பத்துடன் கதிர்காமத்திற்கு கால்நடையாகச் சென்றோம். எம்முடன் ஆயிரக்கணக்கானோர் வந்தனர்.நாம் 2ம் நாளே ஆற்றுப் பகுதிக்கு வந்துவிட்டோம். அன்றிரவு ஆற்றங்கரையில் குழு குழுவாக சுமார் ஆயிரம் பேர் உறங்கினோம். காலையில் 4.00 மணிக்குள் நான் எழும்பி கடலையை அவிக்க அடுப்பிலே போட்டுவிட்டு தேத்தண்ணி வைக்க தண்ணீரையும் வைத்துவிட்டு மகளை எழுப்பினேன்.
அவரும் எழுந்து தேனீரைத் தயாரித்தார். நான் சற்று தள்ளி மலைத் திட்டியிலேறி காலைக்கடன் முடித்துவிட்டு வரவும் தேனீரும் தயாராக இருந்தது. அங்கு மகள் தனது குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு தங்கச்சியிடம் பிள்ளையைக் கொடுத்துவிட்டு தண்ணீர்ப் போத்தலுடனும் டோர்ச் லைட்டுடனும் அவர் காலைக் கடனுக்குப் புறப்பட்டார். அப்போது நேரம் 5.15 இருக்கும். அப்போது அப்பா என்ற அலறல் சத்தம் கேட்டது. அங்கு சென்றதும் எனக்கு தூக்கி வாரிப்போட்டது.
மகளை அந்த சிறுத்தை மிருகம் இழுத்துக்கொண்டிருந்தது. உடனே நானும் கத்தினேன். அதற்கிடையில் அங்கு ஆயிரக்கணக்கானோர் குழுமிவிட்டனர். அனைவரும் காணவே அம்மிருகம் அசைந்து நகர்ந்தது. மகள் இரத்த வெள்ளத்தில் கிடந்தாள். தூக்கிக்கொண்டு ஆற்றங்கரைக்குக் கொண்டு வந்து தண்ணீரைத் தெளித்து பார்த்தோம்.
உணர்விருந்தது. உயிர் இருந்தது. பின்பு அருகிலிருந்தோர் இராணுவத்தை அழைக்கச் சென்றனர். காலை 6.00 மணியாகிவிட்டது. அவர்களும் வந்து ஏற்றுவதற்கு முயற்சி எடுக்க அப்போது உயிரி பிரிந்துவிட்டது. கழுத்தில் மூன்று காயங்கள் இருந்தது.
பின்பு நீதிவான் வந்து மரண விசாரணை நடாத்தினார். அதன் பிறகு ஜீப்பில் கதிர்காம ஆஸ்பத்திரிக்குச் கொண்டு சென்றோம். பின்னேரம் 4.30 ஆகிவிட்டது. மறுநாள் கதிர்காமம் வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எம்மை அழைத்து துக்கம் விசாரித்ததோடு அவ்விடத்திலேயே 20 ஆயிரம் ரூபா பணம் தந்தார். கூடவே பெட்டி எடுத்து ஊருக்கு கொண்டு செல்லும் அத்தனை செலவுகளையும் அவரே செய்தார்.
இங்கு கொண்டு வந்து மறுநாள் அடக்கம் செய்தோம். ஓகஸ்ட் 17ம் திகதி கதிர்காம நீதிமன்றுக்கு வருமாறு அழைத்துள்ளார்கள். மரண அத்தாட்சிப்பத்திரம் அன்று தான் தருவார்களென நினைக்கிறேன்.இப்படியாக துக்க துயரத்தில் நாம் இருக்கும்போது ஞானக் கண்ணால் பார்த்த மாதிரி அபாண்டமான பழியை எம் குடும்பத்தின் மீது சுமத்தியுள்ளார் ஒரு எம்.பி. தமிழ் பெண்ணின் சாவிலும் அரசியல் நடாத்துவார்கள் என்பது ஊர்ஜிதமாகியுள்ளது. மகளைக் கடித்த அந்த மிருகத்தை விட இவர்கள் மோசமானவர்கள் என நான் கருதுகிறேன் என்றார்.
http://www.mahaveli.com/?p=19991#more-19991

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக