திங்கள், 18 ஜூலை, 2011

21 வருடங்களுக்கு பின் நெடுந்தீவு சென்ற முதலாவது அமைச்சர் பசில் ராஜபக்ஸ

யாழ். குடாநாட்டில் அமைந்துள்ள நெடுந்தீவு பிரதேசத்துக்கு 21 வருடங்களின் பின்னர் மத்திய அரசாங்க அமைச்சர் ஒருவர் சென்று அங்குள்ள மக்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்துகொண்டுள்ளார். இந்தப் பெருமையை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பெற்றுள்ளார்.
யாழ். குடாநாட்டில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கடந்த சனிக்கிழமை நெடுந்தீவுக்குச் சென்று மக்களுடன் சந்திப்புக்களை நடத்தியுள்ளார்.
1990ஆம் ஆண்டு அப்போதைய தேசிய பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரஞ்சன் விஜேரட்ண நெடுந்தீவுக்கு விஜயம் செய்த பின்னர் 21 ஆண்டுகளின் பின்னர் நெடுந்தீவுக்குச் சென்ற அமைச்சர் என்ற பெருமை அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்குக் கிடைத்துள்ளது.
சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் வாழ்ந்துவரும் இந்தப் பகுதியில் குடாநாட்டின் ஏனைய பகுதிகளுக்குச் செல்வதற்கான கடல்பாதை அகலமாக்கப்பட்டு இலகுவான படகுசேவைக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கான திட்டத்தை ஆரம்பித்துவைத்த அமைச்சர் நெடுந்தீவை சுற்றுலா மையமாக்கும் அரசாங்கத்தின் திட்டம் குறித்தும் ஆராய்ந்திருந்தார்.
எதிர்வரும் காலங்களில் நெடுந்தீவில் சுற்றுலா மையங்கள், சுற்றுலா ஹோட்டல்கள் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.நெடுந்தீவில் நீர் விநியோகம் மற்றும், உவர்நீர் தடுப்பு அணையை அமைக்கும் திட்டத்தையும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஆரம்பித்து வைத்ததுடன் மக்களின் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்துகொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக