புதன், 13 ஜூலை, 2011

கலாநிதி மாறனுக்கு போலீஸ் சம்மன்,பண மோசடி-மிரட்டல்: விசாரணை

சென்னை: பண மோசடி மற்றும் கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய புகார்கள் குறித்து விசாரணை நடத்த வேணடியிருப்பதால் கே.கே.நகர் காவல் நிலையத்திற்கு வருமாறு கூறி சன் டிவி அதிபர் கலாநிதி மாறனுக்கு கே.கே.நகர் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

சேலத்தைச் சேர்ந்த விநியோகஸ்தர் செல்வராஜ் என்பவர் தீராத விளையாட்டுப் பிள்ளை பட விநியோகம் தொடர்பாக கொடுத்த பண மோசடி மற்றும் கொலை மிரட்டல் வழக்கில் சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் தற்போது கலாநிதி மாறனையும் போலீஸார் விசாரிக்கவுள்ளனர். இதற்காக விசாரணைக்கு வருமாறு கூறி கலாநிதி மாறனுக்கு போலீஸ் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இன்று அவர் கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விசாரணையைத் தொடர்ந்து கலாநிதி மாறன் மீதும் வழக்குத் தொடரப்பட்டு அவர் கைது செய்யப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக