திங்கள், 11 ஜூலை, 2011

பாராட்டுக் கூட்டங்களில் பங்கேற்கக் கூடாது: அமைச்சர்களுக்கு ஜெ. தடை

மக்கள் பிரச்சனைகளை எல்லாம் தீர்த்து வைக்கும் வரை அமைச்சர்கள் யாரும் பாராட்டுக் கூட்டங்களில் கலந்துகொள்ளக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அதிமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து அரசு விழாக்கள் ஆடம்பரமின்றி நடக்கின்றன. முதல்வர் கலந்துகொள்ளும் விழாவாகினும் வீண் செலவு செய்யக்கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மக்கள் பிரச்சனைகளுக்கு முக்கியதுவம் கொடுத்து அவற்றை விரைந்து தீர்க்க வேண்டும் என்று அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மக்களின் பிரச்சனைகளை எல்லாம் தீர்த்து வைக்கும் வரை அமைச்சர்கள் யாரும் பாராட்டு விழாக்களில் கலந்துகொள்ளக் கூடாது என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சின்னையா தெரிவித்துள்ளார்.

சென்னை உள்ளகரம் புழுதிவாக்கம் நகராட்சி சார்பில் நேற்று மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் சின்னையா இந்த தகவலைத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக