சனி, 23 ஜூலை, 2011

பாலபாரதி பேச்சு வறுமையும் கல்வி வியாபாரமும்தான் எங்கள் எதிரி.



அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 13வது மாநாடு நெல்லை மாவட்டம் சங்கரன்கோயில்
நகரில் இன்று நடைபெற்றது.

இந்த மாநாட்டில் பேசிய மாதர் சங்க மாநில செயலாளரும், திண்டுக்கல் கம்யூனிஸ்ட்  எம்.எல்.ஏ.வுமான பாலபாரதி பேசினார்.

அவர்,   ‘’உலக நாட்டில் பிறந்த் குழந்தைகளை தொட்டிலில் போடும் முறை கிடையவே கிடையாது.  
தமிழ்நாட்டில் தான் தொட்டிலில் போடும் அவலம் உள்ளது.
எங்களுக்கு எதிரி வேறு யாரும் அல்ல;  எங்கள் முன்னே நிற்கும் வறுமைதான் எங்கள் எதிரி.   ஒரு
முட்டை கூட எங்களால் வாங்கி சாப்பிட முடியவில்லை என்று உலக வீராங்கனைகளே கூறுகிறார்கள்.

சமச்சீர் கல்வி அனைவருக்கும் வேண்டும்.    அந்த பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜிகளூக்கு 12
ஆயிரம் ரூபாய் கல்விக்கட்டணம் வாங்குகிறார்கள்.   ஆனால் அங்கே பணி புரியும் ஆசிரியர்களுக்கு 2 ஆயிரத்துக்கு மேல் சம்பளம் கிடையாது.

பெண் கல்விக்கு எதிரானது வறுமையும் கல்வி வியாபாரமும்தான் தடையாக உள்ளது.   இதை அரசாங்கம் கண்டு கொள்வதில்லை’’என்று பேசினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக