திங்கள், 25 ஜூலை, 2011

தூத்துக்குடி கொழும்பு சொகுசு கப்பல் சேவை குறைந்த கட்டணத்தில்

கொழும்புக்குமிடையிலான பயணிகள் கப்பல் சேவையானது சங்கடமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜூன் 13 இல் இந்த பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டது. 1044 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய ஸ்கோஷியா பிரின்ஸ் என்ற இந்தக் கப்பலானது வாரத்திற்கு இரு தடவைகள் மேற்கொள்ளும் பயணத்தில் 150 பயணிகளையே ஏற்றிச் செல்வதாக ரைம்ஸ் ஒவ் இந்தியா பத்திரிகை நேற்று சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்தச் சேவை ஆரம்பிக்கப்பட்ட போது சிறப்பானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே பலசுற்று ராஜதந்திர பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதன் பெறுபேறாகவே இச்சேவை ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இச்சேவையை மும்பாயைத் தளமாகக் கொண்ட பிளேமிங்கோ லைனஸ் இயக்கிவருகிறது. பயணச்சீட்டுகள் விநியோகம், சந்தைப்படுத்தல் பொதிகள் என்பவற்றை இது ஏற்படுத்த வேண்டியுள்ளது. இந்தச் சேவை தொடர்பாக முன்னணி பயணிகள் பயண முகவரமைப்புகள் பல அறியாமல் இருப்பதாக தொழில்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
"ஆய்வுகளை மேற்கொள்வதற்கு இன்னமும் காலம் ஏற்படவில்லை. ஆனால் தனது கொள்ளளவில் 15 வீதத்துடன் கப்பல் செல்லுமானால் சேவையானது ஏற்புடையதாக இருக்க முடியாதென தூத்துக்குடி துறைமுக ட்ரஸ்ட்டைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறுகிறார்.
பிரபல்யப்படுத்தும் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆட்கள் பல்வேறு பக்கேஜ்கள் இருப்பது குறித்து தெரியாமல் உள்ளனர். இத்தகைய சேவைகளுக்கு பொருத்தமான சந்தைப்படுத்தல் முக்கியமானதாகும். இந்த விடயத்தில் இயக்குபவர் பொதுவான விற்பனை முகவர்களை சென்றடைய முயற்சிக்கவில்லை. இப்போதும் தனியான பதிவு முறைமையே காணப்படுகிறது என்று கப்பல் துறை சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறுகிறார்.
ஆனால், சேவையை இயக்குபவர் நம்பிக்கையுடன் இருக்கின்றார். 60 வீதமான பயணிகள் வர்த்தகர்கள் ஆகும். பிரதானமாக ஆடைகள், ஏனைய பொருட்களை கொண்டு செல்கின்றனர். நாங்கள் மெதுவாக சந்தையை எட்டிப்பிடித்து வருகின்றோம். சேவையின் வர்த்தகத்துறை சாதகத்தன்மை குறித்து இப்போது கருத்துத் தெரிவிக்க முடியாது என்று பேச்சாளர் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவடைந்த பின்னர் இந்தியாவுடன் கப்பல் சேவையை மீள ஆரம்பிப்பதற்கான முயற்சிகளை இலங்கை அரசு ஆரம்பித்திருந்தது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக