வெள்ளி, 1 ஜூலை, 2011

உதயன் பத்திரிகைச் செய்தியாளர் வந்தால் நான் கூட்டத்தைப் புறக்கணிப்பேன் என எதிர்க்கட்சி உறுப்பினர்

இன்றைய யாழ் மாநகரசபையின் மாதாந்த கூட்டத்திற்கு உதயன் பத்திரிகைச் செய்தியாளர் வந்தால் நான் கூட்டத்தைப் புறக்கணிப்பேன் என எதிர்க்கட்சி உறுப்பினர் ரெமிடியஸ் தெரிவித்தார்.

முதல்வர் மாதாந்த கூட்டத்தை ஆரம்பிக்க முன்னர் உறுப்பினருக்கான அறையில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தவேளையில் திடீரென உள்ளே நுழைந்த ரெமிடியஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதில் குறிக்கிட்ட அதே கட்சியைச் சேர்ந்த மாநகரசபை உறுப்பினர் பரம்சோதி இதுதொடர்பாக நீர் கருத்து எதுவும் கூறவேண்டியதில்லை என தெரிவித்தார். இதற்கு ரெமிடியஸ் "உன்னைப்பற்றியும் உனது கட்சியைப்பற்றியும் எனக்கு நன்றாகவே தெரியும்" "உனது கட்சித் தலைமை அரசாங்கத்திடம் சென்று தனது மகளின் படிப்புக்கு வெளிநாட்டு புலமைப்பரிசில் கேட்டது எனக்குத் தெரியும்" என்று கூறினார். உடனே எதிர்க்கட்சி உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் மேலும் பிரச்சனை ஏற்படாதவாறு சமாதானப்படுத்தினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக