இயல் விருது வாங்க கனடா வந்திருந்த எஸ்.பொ விடம் ஒரு இடைமறிப்பு.
-கற்சுறா
கற்சுறா: 2011 ஜனவரிமாதம் நடந்த கொழும்பு சர்வதேச எழுத்தாளர் மாநாட்டினை எதிர்த்து முதற் கொள்ளி வைத்தவர் நீங்கள். கலை இலக்கிய ரீதியாக இலங்கைத் தமிழினத்தை அடிமைப் படுத்தும் ராஜபக்சேவின் திட்டம் தான் உலக எழுத்தாளர் மாநாடு என்றும் சிங்கள மொழி மேலாண்மையை தமிழர்களை ஒட்டுமொத்தமாக ஏற்றுக் கொள்ளச் செய்வதுதான் மாநாட்டின் ஒட்டுமொத்த நோக்கம் என்றும் சொல்லி அறிக்கை விட்டு மாநாட்டைப் புறக்கணித்தவர் நீங்கள். தற்போது மாநாடு முடிந்து இவ்வளவுகாலத்தின் பின் மாநாடு நடத்திவிட்டு தற்போது ஐந்து லட்சம் நட்டம் என்கிறார்கள். இவ்வளவு நட்டப்பட்டு ஏன் மாநாடு நடாத்துவான் என்று கிண்டலடிக்கிறீர்கள். மாநாடு நடத்தியவர்கள் அரசிடம் பணம் பெற்றார்கள் பதவி பெற்றார்கள் என்றும் அரசுதான் பின் நின்று நடாத்துகிறது என்றும் ஆரம்பத்தில் சொன்ன நீங்கள் தற்போது அதை மறந்து அவர்கள் பட்ட நட்டம் குறித்து பேசுகிறீர்கள். அண்மையில் அஸ்ரப் சிகாப்தீன் அவர்கள் மாநாட்டின் செயற்பாடுகள் குறித்து கொடுத்த பேட்டி பற்றி மிக மோசமாகக் கிண்டலடிக்கிறீர்கள். முஸ்லீம்களும் தமிழ்தானே பேசுகிறார்கள் பின் என்ன முஸ்லீம் மாநாடு என்று சொல்கிறார்கள் என குசும்பு பேசுகிறீர்கள்? தற்காலத்தில் உங்களைப் பிடித்து ஆட்டும் தமிழ்த் தேசிய வெறியும் புலித்தேசிய விருப்பும் தானே மாநாட்டை கண்மூடித்தனமாக எதிர்க்கவைத்தது?கற்சுறா: நீங்கள் தமிழ் ஆக்க இலக்கியத்தில் யாரும் எட்டாத பெரும் பாய்சலை நிகழ்த்தியவர். ஒரு கலகக் காரனாக அதிர்வூட்டும் படைப்புக்களை எழுதிக்காட்டி தமிழிலக்கிய ஊழியத்தில் ஒரு அச்சத்தை ஏற்படுத்தியவர். படைப்பிலக்கியத்தில் தமிழை உண்டு இல்லை என்றளவுக்கு பயன்படுத்திக் காட்டியவர். தமிழ் இலக்கியத்தில் சிறுகதை கவிதை நாவல் என்று பரந்து பட்டு விளாசித் தள்ளியவர். ஈழத்தில் எஸ்.பொ ? என்ற நாவல் போல் இன்றுவரை ஒன்று வந்ததில்லை. நீங்களே சொல்கிறீர்கள் உங்களுடைய எழுத்தில் உங்களுக்குப் பிடித்ததும் அதுதான் என்று. அவ்வளவு விறைப்பான வித்தைகள் அடங்கிய எழுத்து அது. தீ சடங்கு வீ நனவிடை தோய்தல் என்று உங்கள் நூல்கள் கொடுத்த தாக்கத்தில் இருந்து இன்னும் நாங்கள்; விடுபடவில்லை. இப்படியிருக்க இன்றுவரை இந்தக் கனடா இலக்கியத் தோட்டம் உங்களைக் கண்டு கொள்ளவில்லை. கண்டு கொள்ளவில்லை என்பதை விட புறக்கணித்தது. அது உங்களைப் புறக்கணித்தது என்பதை அவர்களால் இதுவரை விருது கொடுக்கப்பட்டவர்களின் பட்டியலைப் பார்த்தால் தெரியும். அவர்களது அரசியலுக்குள் நீங்கள் ஒருபோதும் வந்து கொள்ள மாட்டீர்கள். ஆனால் இந்த எழுத்தாளர் மநாட்டை எதிர்த்து நின்றதால்தான் – தமிழ்த் தேசியவெறியை காசி ஆனந்தனுக்கும் மேலால் நீங்கள் கக்குவதால் தான் அட இவனும் நம்மாள்தான் நம்ம கட்சிதான் என்று கண்டுகொண்டு உங்களை இவர்கள் இன்று ஏற்றார்கள். விருது தந்தார்கள்.. பாருங்கள் வாழ்நாள் இலக்கியசாதனைக்குக் கொடுக்கப்படுவதாகச் சொல்லும் இவர்களது விருது கடைசியில் ஒரு மாநாடு எதிர்ப்பு நோட்டீசுக்காக உங்களுக்குக் கிடைக்கிறது. இவ்வளவு காலமாக எஸ்.பொ. என்பவன் எதிர்ப்புணர்வு -கலகம் -மறுத்தோடி -காட்டான் என்று சொல்லி வரும் நீங்கள் இதைப் புறக்கணித்திருக்க வேண்டாமா? எள்ளி நகையாடியிருக்க வேண்டாமா? கொழும்பு சர்வதேச எழுத்தாளர் மநாட்டுக்காரன் சிலுவையில் அறைந்தான் இயல் விருதில் உயிர்த்தெழுந்தேன் என்று சொல்கிறீர்கள் இந்த விருது வாங்குவதில் உங்களுக்கு வெட்கம் வரவில்லையா? உண்மையில் எங்களது எஸ்.பொவுக்கு தற்போது என்னதான் நடந்தது?
மேற்கண்ட கேள்விகளுக்கு நீங்கள் கூறிய நீண்ட நீண்ட பதில்கள் ம்ம்ம் என்று பெருமூச்சு வைக்க விடுகிறது. உங்களின் கடந்த கால சரித்திரம் மிக வெளிச்சமாக இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக தாங்கள் ஒரு நல்ல இலக்கியவாதி. உங்களுக்கு நேர்ந்த சோஹத்தின் வலி கொடிது.தாங்கள் இறுதியாக கூறிய வாசகங்கள் உங்கள் உண்மை நிலையை தெளிவாக காட்டுகிறது.
"என்னுடைய ஒரேயொரு வாரிசு மித்ராதான் அவன் ஒரு கவிஞனாகவே இருந்து என்னுடன் வாழ்ந்தவன். அவனை நான் இழந்த தவிப்பு உங்கள் ஒருவருக்கும் தெரியாது. என்னுடைய அந்த ஆதரவு நிலைப்பாடு என்னுடைய மகன் மீது கொண்டுள்ள பாசம் மட்டுந்தான். இது உண்மை. நான் ஒருபோதும் பொய் சொல்பவனல்ல. பொய்யைத் தலைக்கள் கொண்டு திரிந்தால் என்னால் எழுதமடியாது."
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக