வியாழன், 7 ஜூலை, 2011

ஜெர்மனில் தமிழர்கள் வீடுகளில் திருட்டு சக தமிழர்களே திருடர்கள்

ஜெர்மனில் தமிழர்கள் வீட்டை குறிபார்த்து தொடர் கொள்ளை!

ஜெர்மனி எசன் நகரில் உள்ள மூன்று தமிழர்கள் வீட்டில் இரு வாரத்தினுள் தொடர்ந்து மூன்று வீடுகளில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இக்கொள்ளைச் சம்பவங்களில் பட்டப்பகலில் இடம்பெற்றுள்ளன. வீட்டில் உள்ளவர்கள் வெளியேறும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உள்நுழையும் திருடர்கள் வீட்டின் முன் கதவுப் பூட்டை கழற்றி வைத்து விட்டு இத்திருட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திருடர்களின் பிரதான இலக்காக தங்க நகைகளும், பணமுமே இருந்துள்ளதாக வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இத்திருட்டுச் சம்பவங்களில் சக தமிழர்களே தொடர்புபட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் ஜெர்மன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக