சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயற்சிக்கும் இலங்கையர்கள் இனிமேல் அவதானமாயிருக்க வேண் டுமென அவுஸ்திரேலியா எச்சரித்துள்ளது. இவ்வாறு செல்பவர்கள் மலேசியாவுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலய அதிகாரியொருவர் தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவில் தடுத்துவைக்கப் பட்டிருக்கும் சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களை மலேசியாவுக்கு அனுப்புவது தொடர்பான உடன்படிக் கையொன்று இரு நாட்டுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டிருப்பதால் சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் அவதானமாயிருக்க வேண்டுமென்று அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
இந்த உடன்படிக்கைக்கு அமைய அவுஸ்திரேலியாவுக்குள் நுழையும் சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் இனிமேல் மலேசியாவுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ள னர்.
இது தொடர்பான ஒப்பந்தத்தில் அவுஸ்திரேலியாவின் குடிவரவு மற்றும் பிரஜாவுரிமைகள் அமைச்சர் கிரிஸ் பொவுன் மற்றும் மலேசியாவின் உள்விவகார அமைச்சர் டடோ செரி ஹிஷ்முடீன் பின் ருன் ஹ¥சைன் ஆகியோர் கோலாலம்பூரில் கடந்த திங்கட்கிழமை கைச்சாத்திட்டனர்.
பலரின் உயிர்களை ஆபத்துக்குள்ளாக்கும் சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களின் செயற்பாடுகளைக் குறைக்கும் நோக்கிலேயே இவ்வாறான உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
மலேசியாவில் ஏற்கனவே 93 ஆயிரம் புகலிடக் கோரிக்கையாளர்கள் புகலிடம்கோரி விண்ணப்பித்துள்ள நிலையில், அவர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்த பின்னரே புதிதாகச் செல்பவர்களின் விண்ணப்பங் கள் பரிசீலிக்கப்படும். எனவே சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல நினைப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
இந்த உடன்படிக்கைக்கு அமைய மலேசியாவில் யூ. என். எச். சி. ஆர். அமைப்பில் பதிவுசெய்த புகலிடக் கோரிக்கையாளர்கள் படிப்படியாக அவுஸ்திரேலியாவில் குடியமர்த்தப்படவுள்ளனர்.
2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் திகதிக்கு முன்னர் பதிவுசெய்த புகலிடக்கோரிக்கை யாளர்கள் மாத்திரமே இந்த உடன்படிக்கைக்கு அமைய அவுஸ்திரேலியாவில் குடியமர்த்தப்படவு ள்ளதாகவும் கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் ஆட்களைக் கடத்தும் வியாபாரத்தைத் தடுக்கும் விடயத்தில் இலங்கை உள்ளிட்ட ஏனைய நாடுகளுடன் அவுஸ்திரேலியா இணைந்து செயற்படுகிறது என்றும் உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரி மேலும் தெரிவித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக