செவ்வாய், 19 ஜூலை, 2011

மதுரை அன்பு என்கிற அன்புச்செழியன் கைது செய்யப்பட்டார்.

மதுரையில் பிரபல சினிமா பைனான்ஷியர்
பிரபல சினிமா பைனான்சியரும், தயாரிப்பாளருமான, விநியோகஸ்தருமான மதுரை அன்பு என்கிற அன்புச்செழியன் கைது செய்யப்பட்டார்.
‘’கோபுரம் பிலிம்ஸ்’’ சார்பில் இவர் திரைத்துறையில் மிக பிரபலமாக இருந்து வந்தார்.; பல படங்களுக்கு பைனான்ஸ் கொடுத்ததன் மூலம் தயாரிப்பாளர்களையும், நடிகர்களையும் மிரட்டியதாக அவ்வப்போது இவர் மீது சர்ச்சை எழுந்தது. பிரபல இயக்குநர் மணிரத்னம் அண்ணன் ஜி.வி. தற்கொலை விவகாரத்திலும் இவர் மீது சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில் நில அபரிப்பு வழக்கில் இவர் இன்று இரவு மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளார்.  இவர் மீது மேலும் நான்கு புகார்கள் உள்ளன என்று போலீஸ் வட்டாரம் தெரிவிக்கின்றது.
திமுகவின் மதுரை முக்கிய பிரமுகர்கள் பொட்டு சுரேஷ், தளபதி இன்று இரவு கைது செய்யப்பட்டிருப்பதை தொடர்ந்து அன்பு கைது செய்யப்பட்டிருப்பதால் மதுரையில் மிகவும் பதட்டம் நிலவுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக