புதன், 20 ஜூலை, 2011

தமிழக அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது நில மோசடி புகார்

திருவண்ணாமலை: தமிழக வணிக வரித்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது நில மோசடி புகார் கூறப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், வேங்கைகால் ஊராட்சி துணைத் தலைவர் மூர்த்தி என்பவர் தமிழக வணிக வரித்துறை அமைச்சர் அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி மீது நில மோசடி புகார் கொடுத்துள்ளார்.

அவர் கொடுத்துள்ள புகாரில் கூறியுள்ளதாவது,

கலசப்பாக்கத்தில் எனக்கு சொந்தமாக 4.5 ஏக்கர் நிலம் இருந்தது. அதன் மதிப்பு ரூ. 1 கோடி. கடந்த 2008-ம் ஆண்டு அமைச்சர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி என்னை மிரட்டி அந்த நிலத்தை வெறும் ரூ. 50 லட்சத்திற்கு வாங்கினார்.

எனவே அந்த நிலத்தை மீட்டு, அமைச்சர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக