வியாழன், 21 ஜூலை, 2011

நடிகர் ரவிச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதி,ஸ்ரீதர் 1964-ல் காதலிக்க நேரமில்லை



சென்னை: சினிமா நடிகர் ரவிச்சந்திரன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரகக் கோளாறு காரணமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ் திரையுலகில் 1960 மற்றும் 70 களில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர் ரவிச்சந்திரன். திருச்சியில் புனித ஜோசப் கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற இவரை இயக்குனர் ஸ்ரீதர் 1964-ல் காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். பின்னர் அதே கண்கள்,இதய கமலம், கவுரி கல்யாணம், குமரி பெண், மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, நான், உத்தரவின்றி உள்ளே வா, புகுந்த வீடு உள்பட ஏராளமான படங்களில் நடித்தார்.  ரவிச்சந்திரன் ஸடைல் அப்போதைய ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. கல்லூரி, பள்ளி மாணவிகள் ரவிச்சந்திரனின் தீவிர ரசிகைகளாய் இருந்தனர். அவர் படங்கள் 150 நாட்களை தாண்டி ஓடின. விஜயகாந்த் நடித்த ஊமை விழிகள் படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்தார். அதன் பிறகு குணசித்திர வேடங்களில் வந்தார். ரஜினியுடன் அருணாசலம், கமலுடன் பம்மல் கே சம்பந்தம் படங்களிலும் நடித்தார். ரவிச்சந்திரன் மனைவி விமலா, மகள் லாவண்யா, மகன்கள் அம்சவர்த்தன் பாலாஜி ஆகியோர் ஆஸ்பத்திரியில் இருந்து கவனித்து வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக