வியாழன், 23 ஜூன், 2011

TNA நடிப்பில் நடிகர்திலகம் சிவாஜி கணேசனையே மிஞ்சியிருக்கலாம்


இராணுவத்துடன் ஜாலி மூட்டில் கூட்டமைப்பு                                   
TNA -Armyஇந்தப்படங்கள் எப்பிடி இருக்குது கற்பனை பண்ணிப்பாருங்கள் “அளவெட்டியில் எங்கள் கூட்டத்தை குளப்பி உங்கட இராணுவப்பையன்கள் எங்களுக்கு நல்ல பிரச்சாரத்தையும் அனுதாபத்தையும் பெற்றுத்தந்திட்டினம் Thank you verymuch
அதற்காகத்தான் அவர்களின்ட தளபதியான உங்களைப் பாராட்ட வந்திருக்கிறம் எங்கட மற்ற எம்.பி சரவணபவான் எப்பவுமே கொழும்பிலை மேலிடத்தொடர்பு உள்ள ஆள் அதுதான் அவர் அவையளைப்பாராட்ட கொழும்புக்கு போயிட்டார் எண்டு சிரிச்சுக்கொண்டு சொல்லுகிறமாதிரி இல்லையா? 
தமிழர் தேசியகூட்டமைப்பின் கூத்தாட்டம் யாழ்ப்பாண இராணுவத்தளபதியுடன் நாலு சுவருக்குள்; நடந்திருக்குது. தங்களுடைய இந்த நாடகம் வெளியில் வராது என இந்த கூட்டமைப்பினர் நினைத்து சிரிச்சு சிரிச்சு ஜோக் அடித்து கதைச்சிருக்கினம் 40வருசமாக தமிழ்மக்களை இப்படித்தான் ஏமாத்திபேய்க்காட்டினவையள்.                              
ஆமிக்காரனோட அரசாங்கத்தோட இரகசிய உறவு வைக்கிறது. வெளியில வந்து எங்களுக்கு இராணுவத்தால் பாதுகாப்பு இல்லை அரசாங்கத்தில் நம்பிக்கை இல்லை என்று அறிக்கைவிடுவது இப்படியாக  தமிழ்மக்களையும் சர்வதேச நாடுகளையும் முட்டாள் ஆக்குவது. இந்தப்படங்களை இவர்களுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்த அமெரிக்கா முதல் அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டும்.                                      
கூட்டமைப்பு எம்.பிக்களான சுரேஸ் பிறேமச்சந்திரன் சிறீதரன் சுமந்திரன் மாவைசேனாதிராஜா ஆகியோர் இந்த இன்பமூட்டும் சந்திப்பில் இராணுவத்தளபதியுடன் கலந்துகொண்டுள்ளனர். அளவெட்டியில் அடிவாங்கியது; இவர்களை நம்பி கூட்டத்திற்கு வந்த இவர்களின் அப்பாவி ஆதரவாளர்கள்   
இந்த கூத்தமைப்பினர் மனதிற்குள் நினைத்திருப்பார்கள் இராணுவத்தினர் தங்களைத்தாக்கியிருந்தால் முகத்திலை கையிலை கட்டுப்போட்டு நடிப்பில்  நடிகர்திலகம் சிவாஜி கணேசனையே மிஞ்சியிருக்கலாம் என்று. அது நடக்கேல்லை. 
                                                                             என்ன செய்வது இவர்கள் தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக இருக்கும்வரை அரசாங்கத்திற்கு இன்னுமொரு முள்ளிவாய்க்கால் வெற்றிமாதிரித்தான். ஏன்என்றால் இவர்களும் பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தை எண்டு காலத்தை பதவிக்காலத்தை ஓட்டுவார்கள்.  
                                        
இவர்களின் நடிப்பை விரிவாகப்பார்ப்பதற்கு  Cimicjaffna.lk இணையத்தளத்திற்கு செல்லவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக