புதன், 8 ஜூன், 2011

சிக்கியது வேங்கை Sun pictures வாங்கியுள்ளது.


அவன் இவன் படத்தை வாங்க சம்மதித்து பின்னர் திடீரென பின்வாங்கிய சன் பிக்சர்ஸ், இப்போது தனுஷ் நடித்துள்ள வேங்கை படத்தை வாங்கியுள்ளது.

சன் பிக்சர்ஸ் கடைசியாக வெளியிட்ட தனுஷ் படம் மாப்பிள்ளை. பாக்ஸ் ஆபீஸில் படு தோல்வியைச் சந்தித்தது இந்தப் படம்.

ஆனால் இதற்கு முன் தனுஷ் நடிக்க, சன் பிக்ஸர்ஸ் வெளியிட்ட படிக்காதவன், ஆடுகளம் போன்ற படங்கள் நல்ல லாபம் பார்த்தன. அந்த நம்பிக்கையில், இப்போது வேங்கை படத்தை வாங்கி வெளியிடுகிறது சன்.

ஹரி இயக்கியுள்ள இந்த வேங்கையில், தனுஷுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டப் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள ஆக்ஷன் - ரொமான்டிக் மசாலா இந்த வேங்கை.

தேவிஸ்ரீபிரசாத் இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் பாடல் வெளியீடு வரும் 10-ம் தேதி அதாவது நாளை மறுதினம் சென்னையில் நடக்கிறது.

English summary
Danush's next release Venghai, an action-masala film directed by Hari, has been snapped for a record price by the market leader Sun Pictures .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக