கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின வனிதா அமைப்பின் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான சாந்தினி கோங்ஹாகே இந்த குற்றசாட்டை முன்வைத்தார்.
மேலும் அவர் ரிஸான நபீக் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்:-
ரிஸானா நபீக்கின் பிரச்சினையை வைத்து அரசியல் லாபம் தேட அரசாங்கம் முயற்சித்தமையினாலேயே இன்று இந்த நிலை ஏற்பட்டுள்ளது. ரிஸானா நபீக்கிற்கு சவுதி அரேபியாவில் கழுத்து துண்டிக்கப்படும் என தண்டனை வழங்கப்பட்டுள்ளதென்ற செய்தியை கேட்டவுடன் இன்று முழு நாடும் கலங்கிப்போயுள்ளது.
சவுதி அரேபிய அரசாங்கம் இத்தண்டனையை வழங்கியுள்ளமை எமக்கு நேற்று மாலையே அறியக்கிடைத்தது. டிசம்பர் மாதம் 7ம் திகதி, ரிஸானா நபீக்கிற்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை செயற்படுத்துவது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் கோரிக்கையால் சவுதி அரேபிய மன்னரால் கைவிடப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா விசேட உரை நிகழ்த்தினார்.
ரிஸானாவுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த தண்டனை குறித்து பல மகளிர் சங்கங்களை இணைத்துக் கொண்டு ஒரு இலட்சம் கையெழுத்துக்களைப் பெற்று ரிஸானாவை காப்பாற்ற செயற்பட்டு வந்தோம். ஆனால் அமைச்சரின் இந்த அறிவிப்பால் எமது திட்டம் முடங்கிப்போனது. அதனால் இதன் முழு பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும். என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக