வீதிப் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை அடையாளம் காணவும், கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் இதர குற்றச் செயல்கள் இடம்பெறாமல் தடுக்கவும் தலைநகர் கொழும்பில் பல பாகங்களில் சீசீரீவி எனப்படும் பாதுகாப்புக் கமராக்கள் வைக்கப்பட்டுள்ளன.
ந்த நிலையில் சிறைச்சாலைகளில் குற்றச் செயல்கள் இடம்பெறுவதை தடுக்க சீசீரீவி கமராக்களை பூட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஒருகட்டமாக கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் பாதுகாப்பு கமராக்களை பூட்ட சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலையில் சுமார் 8 பாதுகாப்பு கமராக்களை பூட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் வீ.ஆர்.டி.சில்வா தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக