ஞாயிறு, 12 ஜூன், 2011

ரீமா சென்: நல்ல நடிகைகளுக்கு இங்கே வாய்ப்பு கிடைக்காது

ஆயிரத்தில் ஒருவன் வெளியான பிறகு ஒரு தமிழ்ப் படத்தில் கூட நடிக்கவில்லை ரீமா சென். காரணம், அவரைத் தேடி எந்தத் தயாரிப்பாளரும், இயக்குநரும் வரவே இல்லை.

இந்தி, தெலுங்கு என எதிலும் போதிய வாய்ப்புகளில்லாத நிலையில், சில மலையாள வாய்ப்புகள் வர, சட்டென்று ஒப்புக் கொண்டார் ரீமா.

இவற்றில் ஒரு படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்கிறார். ஷாஜி கைலாஷ் இயக்கும் படம் இது. படத்தின் பெயர் தி கிங் அண்ட் தி கமிஷனர்.

இந்தியில் தயாராகும் சுப்பிரமணியபுரம் ரீமேக்கில் நடிக்க முதலில் ரீமாவைக் கேட்டு வந்தார்கள். பின்னர் அந்த படமே கிணற்றில் போட்ட கல் மாதிரி கம்மென்று கிடக்கிறது.

தமிழ்ப் படங்களில் இனி பார்க்க முடியாதா ரீமாவை? இந்தக் கேள்வியை அவரிடம் கேட்டபோது, படு கோபமாக இப்படிச் சொன்னாராம்:

"தமிழில் நல்ல நடிகைகளுக்கு வாய்ப்பு ஏது... இனி நானாக யாரிடமும் வாய்ப்பு கேட்பதாக இல்லை. வரும்போது பார்த்துக் கொள்ளலாம்!"

English summary
Reema Sen, one of the hottest actresses in Tamil is now going to Malayalam industry due to lack of offers in Tamil. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக