செவ்வாய், 14 ஜூன், 2011

பள்ளிக்கூட அறையில் தூக்கில் தொங்கிய மாணவி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் எஸ்.ஆர்.வி.  ஹைடெக் இண்டர்நேஷனல் பெண்கள் பள்ளியில் இன்று மாணவி தூக்கில் தொங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிகள் 15ம் தேதி திறக்கப்படவுள்ளதால் வெளியூரில் இருந்து வந்து விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளை இன்றே கொண்டு வந்து விடுதியில் விட்டுச்சென்றனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியைச்சேர்ந்த முகமது அலி ஜின்னா மகள் ரபிதுல் அச்சாரியா (17 வயசு) இந்த பள்ளியில் +2 படிக்கிறார்.

இவரின் தந்தை இன்று பள்ளியில் விட்டுச்சென்றார். மதியம் ஒரு மணிக்கு தோழிகள் அனைவரும் மதியம் சாப்பிட வா என்று அழைத்துள்ளனர். அதற்கு மறுத்துவிட்டு அங்கேயே இருந்துவிட்டார் ரபிதுல்.
தோழிகள் சாப்பிட்டு வந்து பார்த்ததும் அறை உள் பக்கமாக தாள் போடப்பட்டு இருந்தது. கதவை தட்டிக்கொண்டே இருந்தும் திறக்கவில்லை.
சந்தேகம் வலுத்ததால்கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கே சுடிதார் துப்பட்டாவில் தூக்கு போட்டு தொங்கிக்கொண்டிருந்தார் ரபிதுல்.

இது குறித்து காவல்துறை விசாரனை மேற்கொண்டு வருகிறது. மாணவியின் உடல் இன்னும் பள்ளி வளாகத்திலேயே இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக