செவ்வாய், 14 ஜூன், 2011

சீனர் கைது,கசிப்பு உற்பத்தி,சீனாவிலிருந்து பெறப்பட்ட கருவிகளை கொண்டு கசிப்பு

புசல்லாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசமொன்றில் சட்டவிரோதமாக மதுபான தயாரிப்பில் ஈடுபட்டு வந்த சீன நாட்டு பிரஜை ஒருவரை புசல்லாவை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறிப்பிட்ட சீன நாட்டுப்பிரஜை சீனாவிலிருந்து, கொண்டு வரப்பட்டுள்ள கருவிகள் மூலமே சட்டவிரோதமாக மதுபான தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது. குறிப்பிட்ட சீனநாட்டுப்பிரஜை வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஊழியராக பணிபுரிந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக