திங்கள், 13 ஜூன், 2011

பாதிரியார் பாலசுந்தரம் கைது.மாணவியிடம் சில்மிஷம்



ஆவடி லட்சுமிநகர் சம்பூர்ணா அருள் தெருவை சேர்ந்தவர் லட்சுமி (17) . பிளஸ்-2 மாணவி. இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் பாலசுந்தர் (42). அதே பகுதியில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக உள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

லட்சுமியின் தந்தைக்கும், பாலசுந்தரத்துக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதையடுத்து பாலசுந்தரம் அடிக்கடி அவரது வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.

கடந்த மார்ச் 9-ந் தேதி பிளஸ்-2 தேர்வுக்காக லட்சுமி வீட்டில் படித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாதிரியார் பாலசுந்தரம், லட்சுமியிடம் நைசாக பேச்சு கொடுத்து வீட்டில் வேறு யாரும் இல்லை என்பதை தெரிந்து கொண்டார்.

பின்னர் அவளிடம், நான் ஜெபம் செய்தால் தேர்வில் வெற்றி பெற்று அதிக மதிப் பெண் பெறலாம் என்றார். லட்சுமி அதற்கு சம்மதித்தாள். ஜெபம் செய்து கொண்டிருக்கும் போது, பாலசுந்தரத்திற்கு சபலம் ஏற்பட்டது. அவர், அவளது உடலில் பல இடங்களில் கை வைத்து ஜெபம் செய்வது போல் செக்ஸ் சில்மிஷம் செய்தார்.

திடீரென லட்சுமியை கட்டிப் பிடித்து தவறாக நடக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவள் பாதிரியாரின் பிடியில் இருந்து திமிறி விடுபட முயன்று கூச்சலிட்டாள். அலறல் சத்தம் கேட்டு யாராவது வந்து விடுவார்கள் என்று பயந்து போன பாதிரியார் அங்கிருந்து சென்று விட்டார்.

இது குறித்து லட்சுமி தனது தந்தையிடம் கூறி கதறி அழுதாள். இதைத் தொடர்ந்து அவர், பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேனாம் பேட்டையில் உள்ள திருச்சபையில் புகார் செய்தார். ஆனால் அவர் மீது எந்தநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதையடுத்து என்னை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது எங்கு வேண்டுமானாலும் புகார் செய்யுங்கள் என்று லட்சுமியின் தந்தையிடம் பால சுந்தரம் கூறியுள்ளார்.

இதனால் வேதனைய டைந்த லட்சுமியின் தந்தை, சென்னை புறநகர் கமிஷனர் கரண்சின்காவிடம் இது பற்றி புகார் செய்தார். அவர் இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்கும்படி ஆவடி போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் வழக்கு பதிவு செய்து மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பாதிரியாரை கைது செய்தார். லட்சுமியின் தோழிகள் சிலரிடமும் பாலசுந்தரம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளதாக புகார் செய்யப்பட்டுள்ளது. இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக