புதன், 8 ஜூன், 2011

சூரிய அஸ்தமனம் பற்றி மக்கள் என்னதான் பேசுகிறார்கள் ?

Jeyalalitha
அஸ்தமனமாகிய சூரியன் அஸ்தமனமாகியதுதான். இந்தச் சூரியன் திரும்பவும் உதயமாகாதுmnathumitha - CA,யூ.எஸ்.ஏ
2011-06-08 04:33:33 IST Report Abuse
ஆட்சி காலத்தில் குடும்பத்தை விட்டு கொள்ளை அடித்து, ஊரை அடித்து உலையில் போட்டதால் இன்று திமுக தோற்றது! கருணாநிதி குடும்பம் திகார் சிறையை குத்தகைக்கு எடுத்தது. இன்று ஆட்சி கைக்கு வந்தவுடன் ஜெயலலிதா ஆணவம் வெளிப்பட தொடங்கிவிட்டது. அஸ்தமித்த சூரியனை ஜெயலலிதா தனது செயல்களால் மீண்டும் உதிக்க செய்துவிடுவார் போலிருக்கிறது!
K.vijayaragavan - chennai,இந்தியா
2011-06-08 04:31:34 IST Report Abuse
மக்கள் ஐந்தாண்டுகளுக்கு உங்களிடம் லீசுக்கு விட்டிருக்கிறார்கள். முதல்வர் பதவி உங்கள் சொத்தல்ல. சுப்பன் குப்பன் கூட முதல்வர் ஆகலாம். இதை மறக்காதீர்கள். உருப்படியாக மக்களுக்கு ஏதாவது செய்ய முடியுமா என்று பாருங்கள். சட்டசபையை ஒரு நாள் நடத்துவதற்கு ஆகும் செலவை உங்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சியை காட்டுவதற்கும், எத்ரியை வசைபாடுவதற்கும், உங்கள் புகழ்மொழிகளை கேட்பதற்கும் வீணாக்காதீர்கள். மக்களின் ரத்தத்தை, வியர்வையை நீங்கள் உதாசீனப்படுத்துகிறீர்கள். நீங்கள் எதை செய்கிறீர்களோ இல்லையோ, வரும் மழைக்காலத்தில் அங்கங்கே வெள்ளநீர் தேங்காமல் இருக்க வகை செய்யமுடியுமா என்று பாருங்கள். மாநகராட்சி ஊழியர்கள் இன்னும் மெத்தனமாகத்தான் இருக்கிறார்கள். அவர்களை முடுக்கி விடுங்கள். சென்னையில் குப்பைகள் ஒழுங்காக அகற்றப்படுவதே இல்லை. கடந்த ஆட்சியில் இது மிக மோசமாக இருந்தது. நீங்களாவது இதற்கு ஒரு வகை செய்யுங்கள். ஒரு வழி பாதைகளை முடிந்த அளவு குறையுங்கள். உதாரணத்திற்கு ஆள்வார்பேட் ஓடோபோன் அருகே சுற்றிக்கொண்டு செல்ல வேண்டியுள்ளது; லஸ் பகுதியிலும் அப்படியே. இதனால் தேவையற்ற கால விரயம், எரிபொருள் விரயம் ஏற்படுகிறது. ஹெல்மெட் அணிய வற்புறுத்த கூடாது என்று திட்டவட்டமாக அறிவியுங்கள். கடந்த ஆட்சியின் மீது மக்கள் எரிச்சலான விஷயங்களில் இதுவும் ஒன்று. போக்குவரத்து போலீசாருக்கு திட்டவட்டமாக உத்தரவிடுங்கள்,மக்களை அறிவுரை என்ற பெயரில் வதைக்க கூடாது. மக்களுக்கு தெரியும் நல்லதும், கெட்டதும். இப்படி இன்னும் எத்தனையோ சொல்லலாம். நீங்கள் முதலில் பத்திரிகைகள் படித்தாலே பெரிய விஷயம். அதுவும் இது போன்ற பொதுமக்கள் கருத்துகளை படிப்பது மிகவும் அபூர்வம். உங்களுக்கு காரியம் ஆகிவிட்டது. இனிமேல் மக்கள் எதற்கு? இருந்தாலும், ஊதுற சங்கை ஊதுடா நாராயணா; விடியுறபோது விடியட்டும் என்ற கதை தான். வீம்புக்காக இலவசங்களை அள்ளி விடாதீர்கள். மக்களிடம் வெள்ளை அறிக்கை கொடுத்து, உண்மை நிலையை விளக்குங்கள். புரிந்து கொள்வார்கள். முடியாத காரியத்தை முடியாது என்று சொல்லுங்கள். எதிர்கட்சிகளை எதிரிக்கட்சிகளாக பார்க்காதீர்கள். ஜால்ராக்களை அனுமதிக்காதீர்கள். உங்களை கவிழ்க்க, விஜயராஜ் காத்துக்கொண்டிருப்பதை நினைவில் வைத்திருங்கள். சரத் ஒரு டம்மி பீசு. அதனால் பாதகம் இல்லை. தேமுதிக மீது ஒரு கண் இருக்கட்டும். அந்தாள் ஸ்டண்ட் அடிப்பதில் உங்களை விட கில்லாடி. ஜாக்கிரதை. மக்களும் உங்களை கவனிக்கிறார்கள். இதை மனதில் கொண்டு செயலாற்றுங்கள். உங்கள் கட்சியினர் வழக்கம் போல் வசூலில் இறங்கி விட்டார்கள். அராஜகமும் அங்கங்கே தலை தூக்க தொடங்கி இருக்கிறது. உஷார். உங்கள் பெயருக்கு களங்கம் ஏற்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. உஷார்.
s.m.sajahan - nottingham,யுனைடெட் கிங்டம்
2011-06-08 03:25:19 IST Report Abuse
தி மு கா ஆட்சி வேண்டாம் என்று நினைத்துதான் உங்களுக்கு வாக்களித்து வெற்றியடைய வைத்தோம்.தி மு கா இனி வராது வெல்லாது என நீங்கள் நினைத்தால் அதுவே உங்கள் அரசு தடுமாற வழி வகுத்துவிடும்.அதை மக்கள் விரும்பவில்லை.தி மு காவை தலைக்கு மேல் தொங்கும் கத்தி என்று நினைத்து செயல்படுங்கள்,உங்கள் ஆட்சியையும் நன்றாக இருக்கும் தி மு காவும் இனி தலை எடுக்காமல் போகும்,அதைதான் மக்களும் விரும்புகின்றார்கள்.முன்பெல்லாம் எதிர் கட்சிஎன்பது அரசியல் கட்சிகலாகமட்டுதான் இருந்தது,அனால் இன்று மீடியா பலமாக உள்ளது,உடனுக்கு உடன் ஒவ்வரு வீட்டிற்க்கும் படத்தோடு செய்தியாக காண்பித்து விடுகின்றார்கள்.மக்களும் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று இருப்பதிதில்லை,ஒவ்வரு விசயத்தையும் நன்கு கூட்டி களித்து பார்கின்றார்கள்,முடிவையும் தீர்க்கமாக எடுகின்றார்கள்.ஆகவே தி மு காவின் எதிர் காலம் உங்களின் செயல்பாட்டில்தான் அம்மா உள்ளது.உங்களை நம்பி ஆட்சி பொறுப்பினை கொடுத்த மக்களுக்கு நிம்மதியான நிகழ்காலத்தையும் வளமான எதிர்காலத்தையும் கொடுங்கள்,தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வருவரும் உங்களின் பிள்ளைகள்தான்,மக்கள் உங்களை அம்மா என்றுதான் அழைகின்றார்கள் ஆகவே அவர்கள் உங்களின் பிள்ளைகள்தான்.ஒரு தாய் தன் பிள்ளைகளுக்கு நல்லதைத்தான் செய்வாள்,நல்லதை செய்தால்தான் தாய்.
Veluppillai Thanga - Toronto,கனடா
2011-06-08 02:47:14 IST Report Abuse
வைகோ சொன்னது சரியாகப் போய்விட்டது. ஜெயலலிதா திருந்தவில்லை திருந்தவும் மாட்டார் என்பது நூறு விழுக்காடு சரி. சூரியன் இனி உதிக்காது என்கிறீர்கள். சூரியன் உதிப்பதும் இல்லை படுவதும் (அஸ்தமனம்) இல்லை. அது ஒரு மாயத் தோற்றம். சூரியன் இருந்த இடத்திலேயே இருக்கிறது. பூமி தனது அச்சில் சுழல்வதால் அது உதயமாகிப் பின் மறைவது போல் எங்கள் கண்களுக்குத் தெரிகிறது.
vijayakumar - papanasam.,இந்தியா
2011-06-08 02:45:11 IST Report Abuse
இம்ம்மூஉ......இதுகள திருத்தவே முடியாது ......இம்ம்ம் இந்த அஞ்சு வருஷம் எப்படி போக போதுன்னு தெரில..... தொண்டன்: தலைவரே!! என்ன இந்த அம்மா இப்படி சொல்லிருச்சு நம்ம சூரியன் உதிக்கவே உதிகாதம்ல!!!!!!... அய்யா: நீ ஒன்னும் கவலை படாத தம்பி அடுத்த அஞ்சு வருஷம் நமக்குதான்......இந்த டைம் அவங்க ....அடுத்து நாமதான் ...இது தெரியாத உனக்கு என்ன அரசியல் வாதியோ போ..... மாத்தி மாத்தி இதுகளுக்கு வோட்டு போட்டு இதுக சண்டைய பாக்குறது தான் மிச்சம்......அடுத்து அய்யா என்ன சொல்ல போறாரு தெரில.... பட் இன்றேஸ்டா இருக்குல..
kunjumani - Chennai ,இந்தியா
2011-06-08 02:22:59 IST Report Abuse
பூனை கண்ணை மூடிகிட்டு உலகமே இருட்டு அப்படின்னு நினைச்சுதாம், இந்த தாய் கண்ணை மூடிகிட்டு இருக்காங்க அதனால சூரியன் எப்போதும் இவருக்கு தெரியாது , இவரு ஜெயிச்சதே குருட்டு பூனை விட்டதுல தாவின மாதிரிதானே
Pugal - covai,இந்தியா
2011-06-08 01:53:12 IST Report Abuse
தி மு க வின் ஒரு சில தலைவர்கள் ஊழல் செய்ததால் கட்சியே காணாமல் போய்விடும் என்றெல்லாம் சொல்வது அபத்தம் / ஆணவம். டான்சி ஊழலும், மூன்று லட்சம் டாலர் பிறந்தநாள் பரிசு ஊழலும் செய்த ஜெயலலிதாவே மீண்டும் ஜெயிக்க முடிகிறபோது...தி மு கவால் மீண்டும் வெல்ல முடியாதா என்ன. ஐந்து வருடம் போகட்டும் - புத்துணர்ச்சியுடன், எழுச்சியுடன், தி மு க முன்னிலும் வலுவானதாய் வெல்லும்.
Thennavan - Chennai,இந்தியா
2011-06-08 01:27:08 IST Report Abuse
ஒரு முதல்வர் சட்டசபையில் எப்பெடி பேசவேண்டும் என்று கூட் தெரியாமால்...எதோ அரசியல் பொது கூட்டத்தில் பேசுவது போல பேசி தான் இன்னும் மாறவில்லை...என்றைக்கும் மரபோவதும் இல்லை என்று சொல்லமால் சொல்லிவிட்டார்...இனி சூரியன் உதிக்க போவது இல்லை என்று சொல்லி இனி தன் ஆட்சியில் எல்லாம் இருண்ட காலம்தான் என்று சொன்னதற்கு நன்றி....ஜெயலலிதா அவர்கள் நீங்கள் இந்த முறை வெற்றி பெற்றதற்கு காரணம் திமுகவில் நடந்த தவறுகள்தான்....அதானால் வேறு மாற்று இல்லமால் உங்களுக்கு ஒட்டு போட்டதால் முதல்வர் ஆன நீங்கள் இப்பெடிய ஆணவமாக பேசுவதை நிறுத்தமால் இருந்தால் திமுக சந்தித்த தோல்வியைவிட மோசமான தோல்வி எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்பதை மனதில் நிறுத்தி இது போன்ற பக்குவம் இல்லாத பேசுவதை நிறுத்துவது நலம்...
amurudeen - riyadh,சவுதி அரேபியா
2011-06-08 01:18:06 IST Report Abuse
சூரியன் உதிக்காவிட்டால் உலகம் இருண்டு போகும் முதலமைச்சரே, மாத்தி யோசிங்கோ....
MANI - BIRMINGAM,யுனைடெட் கிங்டம்
2011-06-08 01:08:01 IST Report Abuse
நீங்கள் திருந்தியிருப்பீர்கள் என்றுதான் இந்நாட்டு மக்கள் உங்களை ஆட்சியில் அமர்த்தினார்கள்; ஆனால் வழக்கம்போல நீங்கள் பழிவாங்கும் நடவடிக்கையை ஆரம்பித்தது மட்டுமன்றி, முந்தைய அரசின் ஒருசில நல்ல திட்டங்களையும் மூட்டை கட்ட ஆரம்பித்து விட்டீர்கள். ஆக இந்த தமிழகத்திற்கு என்றுமே விடிவு இல்லை என்பது உறுதியாகின்றது. சட்ட மேலவையை ரத்து செய்தது நல்லதே; ஆனால் அஸ்தமனம் என்று ஒன்றிருந்தால், உதித்தலும் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்; மேலும் இலைக்கும் உதிரும் காலம் ஒன்றுண்டு என்பது இயற்கையின் நியதியே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக