செவ்வாய், 7 ஜூன், 2011

உ.பியை 'காலி' செய்யும் ஆலோசனையில் ராகுல்!

லக்னோ: இதுவரை பீகார், தமிழ்நாடு என காங்கிரஸ் கட்சிக்கு படு தோல்வியைத் தேடித் தந்துள்ள ராகுல் காந்தி, தற்போது உ.பி. மாநில சட்டசபைத் தேர்தல் உத்திகள் குறித்த ஆலோசனையில் இறங்கியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இப்போது மகாத்மா காந்தியை விட பிரபலமானவர் ராகுல் காந்திதான். அவரது யோசனைகளுக்கு அங்கு அமோக வரவேற்பு. ஆனால் ராகு்ல் காந்தியின் திட்டமெல்லாம் தொடர்ந்து மண்ணைக் கவ்வியபடிதான் உள்ளது. பீகாரில் பெரும் தோல்வியைத் தழுவியது ராகுல் பார்முலா. அதேபோல தமிழகத்தில் நிலைமை நாறிப் போய் காங்கிஸ் கட்சி நாசமாகியுள்ளது.

இந்த நிலையில் அடுத்து உ.பி. மாநில சட்டசபைத் தேர்தலுக்கான உத்திகளில் குதித்துள்ளார் ராகுல் காந்தி. இன்று காலை லக்னோ வந்த அவர் கட்சித் தலைமையகத்திற்குச் சென்று ஆலோசனைகளி்ல் ஈடுபட்டார். இக்கூட்டத்தில் ராகுல் காந்திக்கு வேட்பாளர்கள் பெயரை தேர்வு செய்யும் அதிகாரத்தைக் கொடுக்கவுள்ளதாக தெரிகிறது.

தேர்தல் உத்திகள், பிரசாரம், தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட வை குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படவுள்ளதாம். உ.பியில் 2012ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Congress General secretary Rahul Gandhi reached here this morning and has rushed to the state Congress office to chair the first meeting of the UP Congress Election Committee. The meeting started at around 1115 hrs and is likely to authorise Mr Gandhi to select the names of the candidates for the next year's Assembly elections in the state. The meeting called to discuss on the selection pattern and the mode of election campaigning for its Mission 2012 is also expected to approve names of the candidates for about 100 seats out of the total 403 in the first phase.
எஸ்.வி சேகரன் 
திமுகவின் கையை பிடித்து முறுக்கி 63 வாங்கி உள்ளடி கழுத்தறுப்புகளும் செய்து தேர்தல் கமிசன் சிபி ஐ எல்லாவற்றோடும் சேர்ந்து நடத்திய நாடகத்தில் தன் வினை தன்னை சுடும் என்ற பாடத்தை படித்தது போதாது போலும். மாயாவதியும் முலாயம் சிங் யாதவும் இருக்கும் வரையில் மவனே உன் பப்பு அங்கு வேகாது  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக