செவ்வாய், 7 ஜூன், 2011

ஆசியாவில் அதிக சம்பளம் பெறும் ஹீரோ சூப்பர் ஸ்டார் ரஜினி!

இதுவரை இந்திய சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நாயகனாகத் திகழ்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினி, இப்போது ஆசியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நாயகனாக உயர்ந்துள்ளார்.

ராணா படத்துக்காக ரஜினிக்கு அளிக்கப்பட்ட சம்பள முன்பணம் ரூ 24 கோடி என ஈராஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தனது சம்பள விவரங்களை ஒருபோதும் மறைக்காதவர் ரஜினி. காரணம் முறைப்படி, அரசுக்கு செலுத்த வேண்டிய வரியைச் செலுத்தி, வருமான வரித் துறையிடம் நற்சான்றிதழும் தொடர்ந்து பல ஆண்டுகளாகப் பெற்று வருபவர்.

அவரது மெகா ஹிட் படங்களான சிவாஜி, எந்திரன் போன்றவற்றின் சம்பளத்தை வருமான வரி பிடித்தம் செய்யப்பட்ட பிறகே பெற்றுக் கொண்டது நினைவிருக்கலாம்.

இப்போது ராணா படத்துக்காக ரஜினிக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் மற்றும் முன்பண விவரங்களை ஈராஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம் ஈராஸ் என்பதால், இந்த விவரங்களை முறைப்படி அறிவித்துள்ளது ஈராஸ். இதன்படி, ராணாவுக்கு ரஜினிக்கு அளிக்கப்பட்டுள்ள முன்பணம் ரூ 24 கோடி.

படத்தின் விற்பனைக்குப் பிறகு லாபத்தில் குறிப்பிட்ட சதவீதம் அவருக்கு மீதிச் சம்பளமாக வழங்கப்படும் என அந்நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுனில் லுல்லா தெரிவித்துள்ளார்.

படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் சௌந்தர்யா ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம், இதுவரை இந்தியாவின் அதிக சம்பளம் பெறும் நடிகர் என்று கூறப்பட்டு வந்த ரஜினி, இப்போது ஆசிய அளவில் முதலிடத்தில் உள்ளார்!

English summary
Superstar Rajini becomes the highest paid actor in Asia after he got the whopping Rs 24 cr advance and a part in the films profit.  ப்ரோபிட்
 
 பாரந்த ராசன் :
அய்யா இது மிகவும் வருத்தம் தரும் செய்தியாகும், தமிழ் மக்கள் எவ்வளவு அறியாமையில் மூழ்கி உள்ளார்கள் என்பதை இந்த செய்தி துல்லியமாக காட்டுகிறது, எது அய்யா பெருமை?
இந்த ரஜினி என்பவர் இதுவரை நடித்ததில் நாடக பாணி, மிகை படுத்தப்பட்ட நடிப்பையே வெளிப்படுத்தி உள்ளார்.
அவரது புரட்டு ஆத்மீக ஈடுபாடு போன்ற விளம்பர ஸ்டான்டுகளால் ஈர்க்கப்பட்ட எராளமான முட்டாள்கள் அவரது படத்தை அதிக விளைகொடுத்தேனும் பார்க்கவேண்டியது ஒரு தெய்வீக கடமையாக எண்ணி அடித்து பிடித்து அதிக விலை கொடுத்து பார்க்கும் ஒரே காரணத்தால்தான் அவரது விலை இப்படி எகிறி பொய் உள்ளது,
ரஜினியின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி எமக்கு அக்கறை இல்லை, ஆனால் அவர் வேஷம் போட்டு ஏமாற்றும்போது நாம் சிலவற்றை சொல்லித்தான் ஆகவேண்டி இருக்கிறது, அவர் சிகரட் விஸ்கி மாமிசம் மற்றும் பெண்விவகரங்களில் அப்பட்டமான சினிமாக்காரன் பக்கா உல்லாச பேர்வழி, நல்லது என்ஜாய் பண்ணு கண்ணா என்ஜாய்.
தமிழா முதலில் உன்னை திருத்திக்கொள்  பிறகு அரசியலை பற்றி கதைக்கலாம். ரஜினியின் அதிக சம்பளம் நீ அதிக முட்டாள் என்பதன் அடையாளம்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக