புதன், 29 ஜூன், 2011

இவர் கதையைத்தான் சாமி படமாக எடுத்தார் இயக்குனர் ஹரி.

உண்மை சாமி கதை -இவரை போன்ற அதிரடி போலீஸ்தான் வேண்டும்

பெயர்;முத்துசாமி
பதவி;டி.எஸ்.பி
பணி புரிந்த ஊர்;பழனி,கோவை
வருடம்-1985-90

அதிரடி என்ன..?


சம்பவம்;1;

சாராயம் காய்ச்சுபவர்கள்,பிக்பாக்கெட்,ரவுடிகள் போன்றோரை கைது செய்தவுடன் அவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் இவர் போடுவதில்லை.அடித்துக்கொண்டே இருப்பார்....நேரம் கிடைக்கும் போதெல்லாம் லாக்கப்பில் வைத்து உதைப்பார்.இது ஒரு வாரம் வரை தொடரும் ..அதன்பின் அவர்களை விட்டுவிடுவார்...அதன் பின் அவர்கள் அந்த தொழிலையே நினைத்து பார்க்க மாட்டார்கள்..அப்படி ஒரு அடி.



சம்பவம்;2; 
இரவில் கும்பலாக சீட்டு விளையாடுபவர்களை பார்த்தால் ரோந்து போகும் இவர் ஜீப்பை நிறுத்தி..என்னப்பா செய்றீங்க..?என்பார்...சார் தூக்கம் வரலை..அதான் சீட்டு விளையாடுறோம் என்பார்கள்...அப்படியா எனக்கும் தூக்கம் வரலை..ஜீபுல ஏறுங்க..அப்படியே சிறுவாணி அணை வரை போவோம் என்பார்...வண்டியில் அவர்களை ஏற்றிக்கொண்டு...15 கிலோ மீட்டர் சென்றதும்..கிலோ மீட்டருக்கு ஒரு ஆளாக இறக்கி விடுவார்..இப்படியே நடந்து வாங்கடா...பொழுது போகும் என்பார்...

சம்பவம்;3;

பழைய மில்கள் முதலாளிகளை மிரட்டி,பெரிய பணக்கார மில் முதலாளிகள் கையெழுத்து வாங்கி அடிமாட்டு விலைக்கு மில்லை தன் பெயருக்கு மாற்றும் வேலைகள் கோவை,பழனி பகுதிகளில் அதிகம் நடந்தன....பெரிய பிரபல முதலாளியாக இருந்தாலும் ,பிக்பாக்கெட்டாக இருந்தாலும் வழக்கு போடமாட்டேன்...லாக்கப்பில் வைத்து ஒரு வாரம் உதைத்து அடித்து தோலை உறித்து அனுப்புவேன்..வேறு யாராவது பணத்துக்கு பல் இளிக்கும் போலீஸ்காரன் வந்தால் உங்கள் வேலையை காட்டுங்கள் என்று பகிரங்கமாக இவர் எச்சரித்ததால்,பல,மோசமான முதலாளிகள்,பிரபல பணக்காரர்கள் கொங்கு மண்டலத்தில் நடுங்கி கொண்டிருந்தார்கள்...

சம்பவம் 4;

இரவு 11 மணிக்கு இரண்டு பெண்கள் மோசமான ஏரியாவில் நடந்து போய் கொண்டிருக்க,,என்னம்மா இந்த நேரத்துல யாரு நீங்க..என கேட்க..பக்கத்து ஹவுசிங் உணிட்ல இருக்கோம்...படத்துக்கு போயிட்டு வர்றோம் சார் என்றிருக்கிறார்கள்..அப்படியா இந்த டார்ச்லைட்டை எடுத்துகிட்டு போங்க..என்றிருக்கிறார்..காலையில் அவர்களின் கணவன்மார்கள் டார்ச்லைட்டுடன் வந்து நன்றி சொல்ல,இரண்டு மணிநேரம் அடி பின்னிவிட்டு,பொம்பளைங்களை படத்து தனியா அனுப்பிட்டு நீங்க..எங்கடா..கூத்தடிக்க போனீங்க..அவங்க..செயிஉனையோ..கற்பையோ பறிகொடுத்தா நாங்க ஜீப்பை எடுத்துகிட்டு...எவனை தேடுறது என பின்னி எடுத்திருக்கிறார்..

சம்பவம்;5; 

மார்க்கெட்டில் காய்கறி வாங்க..அவர் மனைவி...ஜீப்பை எடுத்துக்கொண்டு வர,அதை கண்டதும் தன் புல்லட்டில் போய் டிரைவரிடம் இந்த புல்லட்டை ஸ்டேசனுக்கு எடுத்துகிட்டு போ...நான் மேடத்தை வீட்ல விட்டுடறேன் என சொல்லியிருக்கிறார்...டிரைவர் போனதும்,இவர் ஜீப்பை எடுத்துக்கொண்டு ரோந்துக்கு போய்விட்டார்..அவர் மனைவி..காய்கறி கூடையுடன் டவுன்பஸ் ஏறி சென்றிருக்கிறார்.

என்ன இந்த சம்பவம் எல்லாம் ஏதோ..படத்துல வர்ற மாதிரி இருக்கேன்னு பார்க்கறீங்களா..இவர் கதையைத்தான் சாமி படமாக எடுத்தார் இயக்குனர் ஹரி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக