புதுடில்லி: ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு பிரதமரின் அலுவலகமே பொறுப்பு என்று குற்றம் சாட்டியிருந்த பார்லிமென்ட் பொது கணக்கு குழுவின் 270 பக்க அறிக்கையை சபாநாயகர் மீரா குமார் நிராகரித்து முரளி மனோகர் ஜோஷக்கே திருப்பி அனுப்பி விட்டார்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரிக்க முரளி மனோகர் ஜோஷி தலைமையில் பார்லிமென்ட் பொது கணக்கு குழு நியமிக்கப்பட்டிருந்தது. இந்த குழுவின் தலைவர் ஜோஷி தயாரித்த அறிக்கையில் இந்த ஊழலுக்கு பிரதமர் அலுவலகமே பொறுப்பு என்றும், ஊழல் குறித்த முழு விவரத்தையும் தெரிவித்திருந்தார். அப்போதைய அமைச்சர் ராசா இந்த ஊழலை செய்யாமல் தடுக்க பிரதமர் அலுவலகமும் மத்திய அமைச்சரவை செயலாளரும் தவறிவிட்டனர்.என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
அந்த விசாரணை குழுவில் பெரும்பான்மையாக இடம் பெற்றிருந்த காங்கிரஸ், மற்றும் அதன் ஆதரவுபெற்றிருந்த உறுப்பினர்கள் அந்த அறிக்கையை நிராகரித்தனர். அவ்வாறு நிராகரிக்கப்பட்ட அந்த அறிக்கையை சபாநாயகர் பார்வைக்கு ஜோஷி அனுப்பிவைத்திருந்தார். அந்த அறிக்கையை தற்போது சபாநாயகர் மீராகுமார் நிராகரித்து ஜோஷிக்கு திருப்பி அனுப்பி விட்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக