டெல்லியில் ஜெயலலிதா பிரதமரை சந்தித்தார்.
ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வில் ஒரு போதும் மத்திய அரசோடு சுமுகமான உறவு இருந்தது கிடையாது. சதா துதி பாடிகளின் காவடியாட்டத்தில் மயங்கி மயங்கி அதுபோலவே இந்தியாவில் இருக்கும் எல்லோரும் தன்னை தலையில் தூக்கி வைக்க வேண்டும் என்ற ஆணவம் மத்திய அரசோடு சுமுக உறவு வைத்துக்கொள்ள பெரும் தடையாக இருந்தது.
போதாக்குறைக்கு தலைக்கு மேல் வந்துவிட்ட ஊழல் வழக்குகள் வேறு மத்திய அரசு மனம் வைத்தால் அந்த வழக்குகளில் இருந்து தான் தப்பிக்க முடியும் என்று கணக்கு பண்ணி வாஜ்பாயை கண்ணீர் விடாத குறையாக வாட்டி எடுத்தார்.
என்ன செய்வது வடநாட்டு மக்கள் எம்ஜியார் படங்களை பார்க்கவில்லையே.
நல்லகாலம் உங்களின் ரசிகர்பட்டாளம் தமிழ்நாட்டோடு மட்டும் நின்று விட்டது.
நீங்கள் துளி கூட திருந்த வில்லை என்று உங்களின் கைப்புள்ளை வைகோவே சொல்லிவிட்டார். சமசீர்கல்வியாகட்டும் கலர் டிவியாகட்டும் நீங்கள் ஒரு பார்பனிய ஆட்சியாளராக தான் தெரிகிறீர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக