சனி, 4 ஜூன், 2011

நாங்க கூடா நட்பு இல்லை கலைஞருக்கு காங்கிரஸ் பதில்

சென்னை: கூடா நட்பு துன்பத்தில் போய் முடியும் என்று திமுக தலைவர் கருணாநிதி காங்கிரஸ் மீது மறைமுக தாக்குதல் தொடுத்தார்.

தனது பிறந்த நாளையொட்டி நேற்று அண்ணா சமாதியில் அஞ்சலி செலுத்திய பின் நிருபர்களிடம் பேசிய கருணாநிதி, `கூடா நட்பு கேடாய் முடியும் என்ற பொன்மொழியை மறந்து விடாமல் திமுக உடன்பிறப்புகள் தங்கள் பயணத்தை தொடர வேண்டும்' என்றார்.

இது, பல விஷயங்களிலும் நம்ப வைத்து கழுத்தறுத்த தனது கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே கருதப்பட்டது.

இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வியிடம் கேட்டபோது,
நேரடியாகவோ, மறைமுகமாகவோ திமுக எந்த அச்சுறுத்தலும் விடுக்கவில்லை. அதுபற்றிய கேள்விக்கே இடமில்லை. திமுகவும், காங்கிரசும் கூட்டணி கட்சிகள். எனவே, எந்த யூகத்துக்கும் இடமளிக்க வேண்டாம். மதிப்புமிக்க கூட்டாளி என்ற முறையில், கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீது குற்றச்சாட்டுகளும், மறுப்புகளும் வந்தவண்ணம் உள்ளன. இவை பற்றி காங்கிரஸ் கட்சி பதில் அளிப்பது பற்றிய கேள்விக்கே இடமில்லை. பதில் அளிக்க வேண்டிய அவசியமும் இல்லை. இந்த குற்றச்சாட்டுகளுக்கு தயாநிதி மாறனோ அல்லது சி.பி.ஐயோதான் பதில் அளிக்க வேண்டும். எனவே, அவர்களிடம் கேளுங்கள்.

2ஜி வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சி.பி.ஐயால் நடத்தப்பட்டு வருகிறது. எனவே, முன்கூட்டியே எந்த முடிவுக்கும் வர வேண்டாம். சி.பி.ஐயின் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்வரை பொறுத்திருங்கள். இந்த விவகாரத்தால் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என்றார்.
 

English summary
Congress had downplayed DMK chief Karunanidhi's bad friendship reference. Congress spokesperson Abhishek Manu Singhvi said, DMK has never threatened us directly or indirectly
 
 நாங்க கூடா நட்பு இல்லை கலைஞருக்கு காங்கிரஸ் பதில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக