திங்கள், 20 ஜூன், 2011

லஞ்சம் வாங்கும் கட்டாயத்தில் போலீசார்.ஓசி'யில் தங்கும் உயர் அதிகாரிகள்

மதுரைக்கு குடும்பத்துடன் வரும் போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு தங்கும் இடம், சாப்பாடு உட்பட அனைத்து செலவுகளையும், அந்தந்த பகுதி போலீசார் ஏற்க வேண்டியுள்ளது. இதை சமாளிக்க, லஞ்சம் வாங்க வேண்டியிருப்பதாக போலீசார் புலம்புகின்றனர்.

தென் மாவட்டத்திற்கு சொந்த காரணங்களுக்காக வரும் உயர் அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள், மதுரையில் தங்கி வெளியிடங்களுக்குச் செல்கின்றனர். இத்தகவலை முன்கூட்டியே கமிஷனர் அலுவலகத்திற்கு தெரிவித்து விடுவர்.சில அதிகாரிகள், குறிப்பிட்ட நட்சத்திர ஓட்டலில் தான் அறை வேண்டும் என அடம்பிடிப்பர். இவர்களுக்கு தங்கும் இடம், சாப்பாடு செலவு என அனைத்தையும் பார்த்து செய்யுமாறு கமிஷனர் அலுவலகத்திலிருந்து, அந்தந்த ஸ்டேஷன் போலீசாருக்கு தகவல் தெரிவிப்பர்.பெரும்பாலான அதிகாரிகள், மாநகராட்சி எதிரேயுள்ள போலீஸ் விருந்தினர் விடுதியில் தங்குகின்றனர். இதற்கு ஒருநாள் வாடகை 100 ரூபாய். மத்திய போலீஸ் அதிகாரிகள் என்றால் 200 ரூபாய். சர்க்கியூட் ஹவுசில் தங்க 150, 250 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

இதைக்கூட அதிகாரிகள் தருவதில்லை. அவர்களுக்கு மட்டுமில்லாமல், குடும்பத்திற்கே சாப்பாடு செலவு, அந்தந்த பகுதி போலீசாரின் தலையில் விழுகிறது. தவிர, திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்தால், வாகன வசதி, "பொக்கே' போன்றவற்றையும் போலீசாரே ஏற்பாடு செய்ய வேண்டும்.போலீசார் கூறுகையில், "சர்வீசில் உள்ள அதிகாரிகளை விட, ஓய்வு பெற்ற அதிகாரிகளின் அதிகாரம் தாங்க முடியவில்லை. குடும்பத்துடன் ஊர் ஊராக சுற்றுலா செல்லும் செலவு, எங்கள் தலையில் விழுகிறது. ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கும், பென்ஷன் வாங்கும் இவர்கள், ஒருநாள் வாடகையைக்கூட செலுத்தத் தயங்குகின்றனர்.

ஒரு அதிகாரி வந்தால், குறைந்தது 5,000 ரூபாய் செலவாகிறது. இதை சமாளிக்க, புகார் கொடுக்க வருபவர்களிடமும், வழக்குகளில் சிக்கியவர்களிடமும் "வசூலிக்க' வேண்டியுள்ளது. ஓட்டல்களில், "ஓசி'யில் தங்க அறை கேட்பதால், ரெய்டு செல்லவே கூச்சமாக இருக்கிறது. இதற்கு ஒரே தீர்வு, மதுரை வரும் அதிகாரிகள், அவரவர் செலவில் தங்கிச் செல்ல வேண்டும். இதை அவர்களாக உணர வேண்டும்' என்றனர்.
mangai sofiya - madurai,இந்தியா
2011-06-20 04:55:31 IST Report Abuse
பாவம் அதனால் தான் இவர்கள் லஞ்சம் வாங்குகிறார்களா?? இல்லாவிட்டால் நேர்மையாக இருப்பார்களா.. இந்த போலீஸ்காரர்கள் எல்லாருமே இப்படிதான்.. திருந்தவே மாட்டார்கள்.
kunjumani - Chennai ,இந்தியா
2011-06-20 04:35:22 IST Report Abuse
போலிஸ் லஞ்சம் வாங்கும் பிரச்சனைக்கு நம்ம விசயகாந்த் என்ன ஐடியா வெச்சிருக்கிறார்ன்னா, பாக்கெட் இருந்தாதானே போலிஸ் லஞ்சம் வாங்குது ? அதனால எல்லா போலிசும் இனி வேஸ்ட்டி தான் கட்டனும் முண்டா பனியன் தான் போடணும் ,இப்படி பண்ணுனா ஒரே நாள்ல லஞ்சம் ஒழிஞ்சுடும்
VIVASAYI - Salem,இந்தியா
2011-06-20 03:19:21 IST Report Abuse
ஆஹா.. படு சீப்பாக இருக்கிறதே... என்னது இவ்வளவுதானா...மாநகராட்சி எதிரேயுள்ள போலீஸ் விருந்தினர் விடுதியில் ஒருநாள் வாடகை 100 ரூபாய், மத்திய போலீஸ் அதிகாரிகள் என்றால் 200 ரூபாய், சர்க்கியூட் ஹவுசில் தங்க 150, 250 ரூபாய் ... இவ்வளவுதானா..? அதிகாரிகள் வராத நாட்களில் வெளியாளுங்களுக்கு வாடகைக்கு விட்டாலே, எத்தனை அதிகாரிகள் எத்தனை குடும்பங்களுடன் வந்தாலும் சமாளிக்கலாம் போலிருக்கிறதே? .
Sekar Sekaran - jurong west,சிங்கப்பூர்
2011-06-20 01:42:49 IST Report Abuse
இனி அது போன்ற அதிகாரிகளை பற்றி புகார் சொல்லுங்கள்..!! மீசையை எடுத்துவிட்டு கையில் "அலுமினிய' தட்டோடு குடும்பத்தினரை கொண்டுவர சொல்லுங்கள்..! பயம் வேண்டாம்..!! முடிந்தால் உப்பை நிறைய சேர்த்து உண்ண சொல்லுங்கள்..! மனைவி மக்களோடு வரும் அவர்களுக்கு "மானம்..வெட்கம்..ரோஷம்" இருக்கும் வகையில் சோற்றில் நிறைய உப்பை அள்ளிப்போட்டு கொடுங்கள்...!! பல்போன கிழட்டு ஓய்வு பெற்றவர்களை ஒதுக்குங்கள்.!! மீசையை எடுத்துவிட்டு வந்து ஓசியில் சாப்பிட்டு போக சொல்லுங்கள்..!. இந்த பிழைப்புக்கு நாண்டுகொண்டு சாகசொல்லுங்கள்..!! இதனை அச்சிலேற்றி அவர்கள் தாங்கும் இடங்களில் பிரேம் போட்டு மாட்டிவையுங்கள்..!! அப்படியாவது இவர்களுக்கு புத்தி வருமா என்று பார்ப்போமே..!! அம்மாவின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்..!! நிச்சயம் தக்க நடவடிக்கையை எடுப்பார்கள்..!!
VJ vk - chennai,இந்தியா
2011-06-20 00:48:21 IST Report Abuse
ஓய்வு பெற்ற அதிகாரிகள் உண்மையிலேயே சோறு தான் சாப்பிடுகிறார்களா? இல்ல ...........சாப்பிடுறாங்களா? . இப்போது அரசு அதிகாரிகளுமா?? காவலர்களே உங்களால் ஏன் செய்யமுடியாது என்று கூறமுடியவில்லை.? சிந்தியுங்கள். ஏனென்றால் நீங்கள் ஒரே இடத்தில ஒரே காவல் நிலையத்தில் சுலபமான பணியை பார்க்க விரும்புவதால் தானே? அதற்கு நீங்கள் உங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை சேமித்து இவ்வாறு அதிகாரிகள் வரும்போது செய்தால் உங்களுக்கு நீங்கள் விரும்பும் பணி விரும்பும் இடத்திலே கிடைக்கும் அல்லவா? கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக