யாழ். குடாநாட்டில் இடம்பெற்று வந்த பொலிஸ், இராணுவ பதிவு நடவடிக்கைகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான தீர்மானம் தேசிய பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்பட்டிருப்பதாக யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தமிழ்த் தேசியக்; கூட்டமைப்புக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
இதன்பிரகாரம் குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட சகலவிதமான பதிவு நடவடிக்கைகளும் கடந்த சனிக்கிழமை முதல் நிறுத்தப்பட்டிருப்பதாக பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக