தயாநிதியைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்.
‘‘இதில் எதுக்கு கனிமொழியை சமாதானப்படுத்த வேண்டும்?’’ .
‘‘சிவசங்கரன் புகாரின் பின்னணியில் கனிமொழி, ராசா, ரத்தன் டாடா இருப்பதாக ஏற்கெனவே சொல்லியிருந்தேனே...தாங்கள் சிறையில் இருக்க தயாநிதிதான் காரணம் என்று கனிமொழி தரப்பு நினைக்கிறது. அவர்கள்தான் சிவசங்கரனை தயாநிதிக்கு எதிராக புகார் செய்ய வைத்திருக்கிறார்கள் என்று நம்புகிறார்கள். எனவே, கனிமொழி மூலம் சிவசங்கரனை சமாதானப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார்கள். ஏற்கெனவே தயாநிதியே கனிமொழியைப் பார்த்து இது தொடர்பாக பேசியிருக்கிறார். அப்போது, அவர் ‘எனக்கு எதுவும் தெரியாது’ என்று கை விரித்துவிட்டாராம்.அதனால் அடுத்த அஸ்திரமாக அழகிரியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.’’
‘‘அவர் கனிமொழியிடம் பேசினாரா?’’
‘‘பேசியதாகச் சொல்கிறார்கள். ‘தயாவும் நம்ம குடும்பத்தைச் சேர்ந்தவர்தானே... அவன் ஏதோ தவறு செய்துவிட்டான். அவன் உள்ளே போனால் குடும்பத்துக்குத்தானே கெட்ட பெயர். கொஞ்சம் பொறுமையாக இரு.உன்னை எப்படியாவது வெளியே கொண்டு வந்துவிடுகிறேன். சிவசங்கரனை புகாரை வாபஸ் வாங்கச் சொல்’என்று கேட்டுக் கொண்டாராம்.’’
‘‘கனிமொழி என்ன சொன்னாராம்...?’’
‘‘தயாநிதிக்கு சொன்ன பதிலையே இவருக்கும் சொன்னாராம். ஆனால் மிகவும் சாஃப்டாக சொன்னாராம்...ஆனால் கனிமொழி தரப்போ, தயாநிதியை விடப்போவதில்லை என்று தீவிரமாக இருக்கிறார்களாம். ஸ்பெக்ட்ரம் பிரச்னையை எடுத்த போது,அவருக்கே பாதகமாக வரும் என்று நினைத்திருக்க வேண்டாமா? எங்களை சிக்க வைக்க டெல்லியில் அவர் என்னென்ன செய்தார் என்பதும் எங்களுக்குத் தெரியும் என்று சொல்கிறார்கள்...ஆனால் சிவசங்கரன் தரப்போ யார் சமாதானம் செய்தாலும் புகாரை வாபஸ் வாங்கப்போவதில்லை என்பதில் பிடிவாதமாக இருக்கிறாராம்.தன்னுடைய நிறுவனத்தை குறைந்த விலைக்கு விற்க வைத்ததோடு,முழுப் பணமும் கிடைக்கவில்லை என்பதில் ரொம்பவே கோபமாக இருக்கிறாராம்.’’
‘‘தயாநிதி தரப்பில் என்ன சொல்கிறார்கள்...?’’
‘‘அவர்கள் எங்களுக்கு எந்த பாதிப்பும் வராது என்று சொல்லி வருகிறார்கள். அதோடு, ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசி, அவரது உதவியைக் கோர இருப்பதாகவும் தகவல்கள் வருகிறது.’’
‘‘காங்கிரஸ் உதவினால் எதிர்க்கட்சிகள் சும்மா இருக்குமா?’’
‘‘அதான் பிரச்னையே... ஜூலை மாதம் நாடாளுமன்ற கூட்டத் தொடர் கூட உள்ளது.கூட்டத்தொடரை நடத்தவிடாமல் எதிர்க்கட்சிகள் ரகளை செய்தால் என்ன செய்வது என்ற கவலை காங்கிரஸ் வட்டாரத்தில் பரவிக் கிடக்கிறது. அதற்கு முன்னதாகவே தயாவை ராஜினாமா செய்யச் சொல்லி வருவதாகவும் சொல்கிறார்கள்.’’
‘‘ராஜினாமா செய்வாரா?’’
‘‘கட்சியின் மொத்த அமைச்சர்களும் ராஜினாமா செய்யும் முடிவுக்கு வந்தால் நல்லது என்று நினைத்திருந்தார்,தயாநிதி.கூட்டத்தோடு ராஜினாமா செய்தால் பெரிதாகத் தெரியாது என்று நினைத்தார். ஆனால் தனியாக ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் வந்துவிடும் என்கிறார்கள்.’’
‘‘இவர் ராஜினாமா செய்தால் நிறைய துறைக்கு அமைச்சர்கள் இல்லாமல் இருப்பார்களே...’’
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக