“பெண்கள் தவறு செய்யவில்லை”
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பிரதேசத்தில் சில நபர்களால், கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாகக் கூறப்படும் இரு பதின்ம வயதுப் பெண்களும் குற்றமற்றவர்கள் என்று உள்ளூர் பள்ளிவாசல்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. அவர்கள் மீது குற்றமில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கிகள் பகிரங்கமாக அறிவித்தன.இவர்கள் இருவரும் இணயதளங்களில் பார்க்கக் கூடாத படங்களைப் பார்த்ததாக் கூறி, சில நபர்களினால் கடந்த இருபதாம் தேதி வீதியில் வைத்து கடத்தப்பட்டனர். வீடு ஒன்றில் வைத்து தாக்கப்பட்ட அவர்கள் பின்னர் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தினரிடம் கையளிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இந்தச் சம்பவம் காத்தான்குடிப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அதனையடுத்து மட்டக்களப்பு நீதிபதி உத்தரவிட்டதாகக் கூறி காத்தான்குடி பள்ள்ளிவாசல்கள் சம்மேளனத்தினால் அவர்கள் குற்றமற்றவர்கள் என்று கூறும் அறிவித்தல் புதனன்று வெளியிடப்பட்டதாக அப்பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இருந்தபோதிலும் பள்ளிவாசல்களில் வெளியான அறிவித்தல்களில் கூறப்பட்ட விடயங்களில் தனக்கு திருப்தி கிடையாது என்றும், அது மேலும் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் தந்தையான முகமது யூசுப் அப்துல் ரசாக் தெரிவித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக