வியாழன், 30 ஜூன், 2011

பசில்: டொலர் மற்றும் யூரோவுக்கு ஏமாந்த சிலர் நாட்டை பிரிக்க முயற்சி

தமது பிள்ளைகளுக்கு வெளிநாடுகளில் கல்வியை பெற்றுக் கொடுக்கவென அமெரிக்க டொலர் மற்றும் யூரோவுக்கு ஏமாந்த சிலர் எமது ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சிப்பதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.

அதனால் இவ்வாறான நபர்களின் பொய் பிரச்சாரங்களுக்கு மீண்டும் ஒருமுறை ஏமாற வேண்டாமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு நகரில் நடைபெற்ற வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 500 விவசாயிகளுக்கு நீர் இறைக்கும் இயந்திரம் வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அமைச்சர் இக்கோரிக்கையை விடுத்தார்.

யுத்தத்தினால் பட்ட துன்பங்களை அனைவராலும் உணர முடியும் எனக் கூறிய அமைச்சர், குறைகள் இல்லாத நாடு எங்கும் இல்லை எனவும் குறைகளை நிவர்த்தி செய்து முன்னோக்கிச் செல்ல அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக