புதன், 15 ஜூன், 2011

தமிழக மீனவரைத் தடுக்க: காங்கேசன் முதல் சுண்டிக்குளம் வரை கடற்படை வியூகம்!

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் தமிழக மீனவர்களைக் கட்டுப்படுத்துவதற்காக கடற்படையினரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக வடபிராந்தியக் கடற்படைக் கட்டளைத் தளபதி விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

காங்கேசன்துறை தொடக்கம், சுண்டிக்குளம் வரையிலான கடற்பகுதியே பாதுகாப்புக் கடற்படையின் விசேட அணியினரின் பாதுகாப்பில் இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

வடமராட்சி வடக்கு கடற்தொழிலாளர் சமாசத்தில், வட மாகாண மீனவ சமாசப் பிரதிநிதிகளுக்கும், வடபிராந்திய கடற்படையினருக்கும் இடையே நேற்று நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்ததாக, வடமராட்சி வடக்குக் கடற்தொழிலாளர் சமாசத் தலைவர் எமிலியாம்பிள்ளை கூறினார்.

வடகடலின் பாதுகாப்புத் தொடர்பாக ஆராய்வதற்கு நாளை வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு கடற்தொழிலாளர் சம்மேளத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதாகவும் எமிலியாம்பிள்ளை மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக