வியாழன், 16 ஜூன், 2011

குடியிருப்பாளர் பதிவு என்பதில் உண்மையில்லை: குற்றச் செயல்களைத் தடுப்பதற்காகவே வழமையான தகவல் திரட்டும் பணி

யாழ். குடாநாட்டில் ஆட்களை பதிவு செய்வதாக கூறப்படுவதில் எதுவித உண்மையுமில்லை என யாழ். கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க நேற்று தெரிவித்தார். குடாநாட்டில் குற்றச் செயல்களை தடுப்பதற்கும் ஒழிப்பதற்கும் இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து செயற்படுகின்றனர். இதன் ஒரு கட்டமாக குடாநாட் டிலுள்ள பொலிஸ் நிலையங்கள் தமது பொலிஸ் நிலையத்தை அண்டியுள்ள வீடுகள் வர்த்தக நிலை யங்களின் விபரங்களை திரட்டு கிறது. இப்பகுதிக்குள் புதிய வர்களின் வரவு, இரவு நேர ஆள் நடமாட்டம் தொடர்பாக கண்காணிப்பில் ஈடுபடும் நோக்குடனேயே இவ்வாறான தரவுகள் திரட்டப்படுகின்றன. பொலிஸ் நிலையங்கள் தமது பிரிவிலுள்ள அனைத்து வீடுகள், வர்த்தக நிலையங்களின் விபரங்களை திரட்டவில்லை. பதியவுமில்லை. இதனை வைத்துக் கொண்டு குடாநாட்டு மக்கள் அனைவரையும் பதியும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறுவது தவறு. இதில் எதுவித உண்மையுமில்லை என்றும் மேஜர் ஜெனரல் ஹதுருசிங்க கூறினார். குடாநாட்டில் குற்றச் செயல்கள், சட்டவிரோத செயல்கள் அதிகரித்திருந்தன. இவற்றை தடுப்பதற்காக இராணுவத்தினரும், பொலிஸாரும் தொடர்ந்தும் எடுத்து வரும் நடவடிக்கைகளின் காரணமாக குற்றச் செயல்கள் வெகுவாக குறைந்துள்ளன. இரவு நேர ரோந்து சேவைகள் உட்பட பாதுகாப்பு ஏற்பாடுகளும் தொடர்ந்து செய்யப்பட்டுள்ளன என்றும் மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக