வியாழன், 16 ஜூன், 2011

நம்மூர் டிவி சீரியல் கில்லர்'களைப் பார்த்து மரணம், 'தற்கொலை' செய்து கொள்ளும்!.

 தொலைக்காட்சிகள் எல்லாம் இப்போது தொல்லைக்காட்சிகளாகி வருகின்றன. இது தெரிந்துதான் கடந்த நூற்றாண்டிலேயே தொலைக்காட்சிக்கு “இடியட் பாக்ஸ்” என்று பெயர் வைத்தார்களோ என்னவோ.

ஆனால் மணிக்கணக்கில் தொலைக்காட்சி முன்பு கதியாக கிடப்பவர்களை இளம் வயதிலேயே மரணம் நெருங்குவதாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்கர்கள் முன்னிலை

அனைத்திலும் முன்னிலை வகிக்கும் அமெரிக்கர்கள் டிவி பார்ப்பதிலும் முன்னிலைதான். ஒரு நாளில் அமெரிக்கர்கள் 5 மணி நேரம் டிவி பார்ப்பதாகவும், ஐரோப்பியர்கள் 3-லிருந்து 4 மணி நேரம் டிவி பார்ப்பதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

இளம் வயதில் மரணம்

ஒரு நாளில் 2 மணி நேரத்துக்கு அதிகமாக டிவி பார்த்தால் சர்க்கரை வியாதி வரும் என்றும், 3 மணி நேரத்துக்கு அதிகமாக டிவி பார்த்தால் இதய அடைப்பு ஏற்படும் என்றும், அதிக நேரம் டிவி பார்த்தால் இளம் வயதிலேயே மரணம் சம்பவிக்கும் என்றும் அமெரிக்காவின் “ஹார்வர்டு ஸ்கூல் ஆஃப் பக்ளிக் ஹெல்த்” என்ற மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

சோம்பேறிகளுக்கு எச்சரிக்கை
இந்த ஆராய்ச்சிகளின் நோக்கம் உடலுழைப்பை அதிகப்படுத்தச் சொல்வது மட்டுமில்லாமல், டிவி பார்ப்பது போன்ற சோம்பேறித்தனமான செயல்களில் அதிக நேரத்தை செலவிடுவதால் ஏற்படும் தீமைகளை எடுத்துச் சொல்வதுதான் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட பேராசிரியர்கள் பிராங்க் ஹு மற்றும் கிராண்ட்வெட் ஆகியோர் தெரிவித்தனர்.

1970-லிருந்து 2011 வரை டிவி பார்ப்பது தொடர்பான ஆராய்ச்சி முடிவுகளையும் கருத்தில் கொண்டே இவர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.

ஆனால் இந்த ஆய்வு முடிவுகள் நிச்சயம், நம்மூர் டிவி நேயர்களை கண்டிப்பாக பாதிக்க வாய்ப்பில்லை. அதிலும், காலை 10 மணிக்கு டிவியை ஆன் செய்து விட்டு அரிவாள் மனையும், காய்கறிகள் சகிதமுமாக உட்கார்ந்து, டிவியில் வரும் நாடகங்களின் கேரக்டர்கள் கதறி அழுவதைப் பார்த்து தாங்களும் குமுறி அழுது புலம்பும் நம்மூர் சீரியல் ரசிகைகளை நிச்சயம் இது ஒன்றும் செய்ய முடியாது. மரணமே இந்த 'சீரியல் கில்லர்'களைப் பார்த்து மரணம், 'தற்கொலை' செய்து கொள்ளும்!.

English summary
Review of studies from the past 40 years shows television watchers have higher chances of diabetes, heart problems and early death. A meta-analysis by Harvard School of Public Health scientists, published in the Journal of the American Medical Association, showed that more than two hours television a day resulted in an increased risk of diabetes and heart disease, and three hours a higher risk of premature death

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக