வவுனியாவிற்கு இடம்பெயர்ந்த மலையகத் தமிழர்கள் அங்கும் இரண்டாந்தர பிரஜைகளாகவே நடத்தப்படுகின்றனர்
பல்வேறு பிரச்சினைகள் காரணமாக வவுனியாவிற்கு இடம்பெயர்ந்த மலையகத் தமிழர்கள் அங்கும் இரண்டாந்தர பிரஜைகளாகவே நடத்தப்படுகின்றனர். என மலையக தொழிலாளர் முன்னணியின் உப தலைவர் எஸ்.ஜெயபாரதி விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.மலையக மக்கள் முன்னணியின் தூதுக்குழுவினர் அண்மையில் வவுனியாவிற்கு விஜயம் செய்தது பற்றியும், அங்குவாழும் மலையக தமிழர்களின் நிலன்களுக்காக செயற்பட முற்படுபது பற்றியும் சில அமைப்புகளினால் வெளியிடப்படும் கருத்துகள் சம்பந்தமாகவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; வவுனியாவிற்கு பல்வேறு காரணிகளினால் இடம்பெயர்ந்த எமது சமூகத்தவர்கள் அங்கும் இரண்டாம்தர பிரஜைகள் போலவே நடாத்தப்படுகின்றார்கள்.
அரசாங்க வேலைகள், கிராம அபிவிருத்திகள் போன்ற சகல தேவைகளிலும் இவர்களின் நலன் புறக்கணிக்கப்பட்டே வருகின்றது. 1958 ஆம் ஆண்டில் தர்மபுரத்தில் குடியேறிய எமது மக்கள் அங்குள்ள அடர்ந்த காடுகளை அழித்தே தமது வாழ்க்கையை ஆரம்பித்தார்கள். மிகவும் உயரமான இடத்தில் அமைந்துள்ள இந்த இடங்களில் சுமார் 40 அடி ஆழத்திற்க் கிணறு வெட்டினால்தான் தண்ணீர் கிடைக்கின்றது. ஆனால் தர்மபுரத்திலிருந்து சுமார் மூன்றுமைல் தூரத்தில் அமைந்துள்ள விசுவமடுவில் 5 அடி ஆழத்தில் தோண்டினாலும் நீர் வசதி கிடைக்கின்றது. ஆனால் எமது சமூகத்தவர்கள் இந்த வளமான இடங்களில் குடியேற்றப்பட்டதில்லை.
இதைப்போலவே தொழில்வாய்ப்பு, மற்றும் அடிப்படை வசதிகளில் எமது சமூகத்தவர்கள் மலையகத்தை விடவும் பலமடங்கு புறக்கணிக்கப்பட்டே வாழ்கின்றார்கள். எனவே இம் மக்கள் எதிர்நோக்கும் சமூக பிரச்சினைகளை அரசாங்கத்தின் கவணத்துக்குக்கொண்டு, எமது சமூகத்தவர்களை வவுனியா பிரதேசத்தில் தலை நிமிர்ந்து வாழ வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது மலையக மக்கள் முன்னணிக்கு தார்மீகக் கடமையுள்ளது.
எமது சமூகத்தவர்களின் நலனில், அவர்கள் இலங்கையில் எங்கு வாழ்ந்தாலும் நாம் அக்கறை காட்டுவோம். இவ்விடயம் குறித்து அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுரப்படவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தவர்கள் உலகிலேயே தாம்தான் ஏதோ நாகரிகத்தில் முன்தோன்றிய மூத்த குடி என்று ஓயாமல் லவுட் ஸ்பீக்கர் குரலில் முழக்குவார்கள் ஆண்டபரம்பரை கதை வேறு தம்பட்டம் அடிப்பார்கள். மனித நேயம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பார்கள்.
எந்த ஒரு மலையக தமிழனும் இதை பற்றி இன்னும் கதை கதையாக கூறுவான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக