செவ்வாய், 14 ஜூன், 2011

104 ஆண்டுகளுக்கு பிறகு தூத்துக்குடி-கொழும்பு இடையே பயணிகள் கப்பல்

According to the operators, a single economy class berth will cost Rs 2,243, a deluxe cabin Rs 2,588, a super deluxe cabins Rs. 2,760 while a first class cabin will come for Rs 10,350.

104 ஆண்டுகளுக்கு பிறகு தூத்துக்குடி-கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை ம‌த்‌திய அமை‌ச்ச‌ர்‌‌ ‌ஜி.கே.வாச‌ன் நேற்று தொடங்கி வை‌த்தா‌ர்.

தூத்துக்குடி-கொழும்பு இடையே 1832ஆம் ஆண்டு முதல் தோணிகள் மூலம் சரக்குகள் ஏற்றுமதி, இறக்குமதி நடந்து வருகிறது. செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் 1907ஆம் ஆண்டு எம்.வீ.கலிலியோ, எம்.வீ.லாவோ ஆகிய 2 சுதேசி கப்பல் சேவையை தொடக்கி விடுதலைக்கு வித்திட்டார்.

ஆனால் இந்திய விடுதலைக்கு முன் தூத்துக்குடி-கொழும்பு இடையே நடைபெற்ற பயணிகள் கப்பல் சேவை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் தூத்துக்குடி-கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் அடிப்படையில் கடந்த 2004ஆம் ஆண்டு கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஆனால் அப்போது இலங்கையில் நடந்த போர் காரணமாக கப்பல் போக்குவரத்து தொடங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பிறகு 2010ஆம் ஆண்டு பிரதமர் மன்மோகன்சிங், இலங்கை அதிபர் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் தூத்துக்குடி-கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க முடிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடி-கொழும்பு இடையே பிளமிங்கோ டியூட்டி பிரீ ஷாப் நிறுவனமும், டிரேடக்ஸ் கப்பல் நிறுவனமும் இணைந்து பயணிகள் கப்பல் சேவை வழங்க உரிமம் பெற்றது. இந்த நிறுவனம் தொடர்ந்து 10 ஆண்டுகள் கப்பலை இயக்க உரிமம் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிறுவனத்தின் சார்பில் ஸ்காட்டியா பிரின்ஸ் என்ற சொகுசு கப்பல் இயக்கப்படுகிறது. 9 அடுக்குகளை கொண்ட இ‌ந்த க‌ப்ப‌லி‌ல் 1044 பயணிகள் ஒரே நேரத்தில் பயணம் செய்ய முடியும். இதில் முதல் வகுப்பு, 2 சூட்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான 2 சிறப்பு அறைகள், 22 டீலக்ஸ் கேபின்கள், குளியல், கழிவறை வசதிகளுடன் கூடிய 169 டீலக்ஸ் கேபின்கள், 111 எக்கனாமி அறைகள் உள்பட 317 அறைகள் உள்ளன.

இந்த கப்பல் சேவை தொடக்க விழா நேற்று மாலை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 1வது கூடுதல் கப்பல் தளத்தில் நடந்தது. மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமை‌ச்ச‌ர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு கப்பல் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முதல் பயணத்தில் நல்லெண்ண தூதுவர்களாக துறைமுக அலுவலர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்டவர்கள் அடங்கிய 80 பேரும், 121 சுற்றுலா பயணிகள் ஆக மொத்தம் 201 பேர் பயணம் செய்தனர். இந்த கப்பல் இன்று அதிகாலையில் கொழும்பு துறைமுகத்தை சென்றடை‌ந்தது. அதன்பிறகு மீண்டும் இன்று மாலை அங்கிருந்து புறப்பட்டு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை வந்தடைகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக