வியாழன், 2 ஜூன், 2011

சாமியார் Ram dev black mail உண்ணாவிரத தந்திரம் இதுவும் ஒரு பயங்கர வாதம்தான் காந்தி ஆரம்பித்தது


பாபா ராம்தேவுடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை: ப. சிதம்பரம்
ஊழல் மற்றும் கறுப்புப் பணத்துக்கு எதிராக டெல்லியில் வரும் 4-ந்தேதி முதல் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக யோகா குரு பாபா ராம்தேவ் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் உண்ணாவிரதத்தை கைவிடுங்கள் என்று பிரதமர் மன்மோகன்சிங் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் பிரதமரின் கோரிக்கையை ஏற்க பாபாராம்தேவ் மறுத்து விட்டார்.

பின்னர் இன்று டெல்லி விமான நிலையத்தில் பிரணாப் முகர்ஜி, கபில் சிபல் உட்பட 4 மத்திய அமைச்சர்கள் அவரை சந்தித்துப் பேசினர். மேலும் ஜூன் 3-ம் தேதி இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த ராம் தேவ் குழுவினர் ஒத்து கொண்டுள்ளனர் என தெரிகின்றது

இதுபற்றி டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த  உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம்,

’’ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டுள்ள பாபா ராம்தேவுடன் மத்திய அரசின் அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை ஜூன் 3-ம் தேதி நடைபெறும்.

இந்நிலையில், அமைச்சர் கபில் சிபல் பாபா ராம்தேவுடன் இன்று நடத்திய பேச்சுவார்த்தை குறித்து  ஜூன் 3-ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த ராம்தேவ் தரப்பினர் சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில், அனைவரும் பொறுமை காக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்தார்.

இந்த உண்ணாவிரத பயங்கரவாதத்தை இந்திய மக்கள் இன்னும் புரிந்து தெளிவு பெறவில்லை தற்கொலை குண்டுதாரிக்கும் இவருக்கும் அதிக வித்தியாசம் இல்லை என்றே தோன்றுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக