ஞாயிறு, 26 ஜூன், 2011

40 நாளில் 60 ரவுடிகக்கு குண்டாஸ் சென்னையில் ரவுடிகள் களையெடுப்பு தீவிரம்

அதிமுக ஆட்சிக்கு வந்தது முதல் சென்னை நகரில் ரவுடிகள் களையெடுப்பு முடுக்கி விடப்பட்டுள்ளது. 40 நாட்களில் மட்டும் 60 பேரை தூக்கி குண்டர் சட்டத்தின் கீழ் போலீஸார் சிறையில் அடைத்துள்ளனர்.

இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னை நகரில் ரவுடிகள் மற்றும் கிரிமினல்கள் மீதான வேட்டை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 40 நாட்களில் மட்டும் 60 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒரு ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதில் மாமூல் வாங்குபவர்கள் 14 பேர், கொலை வழக்கில் ஈடுபட்டவர்கள் 15 பேர், சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர்கள் 13 பேர், திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்டவர்கள் 14 பேர்.

இது தவிர விபச்சார புரோக்கர்கள் ஒருவரும், திருட்டு விசிடி வியாபாரம் செய்தவர்கள் 3 பேரும் ஒரு ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் தொய்வின்றி தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
60 rowdies have been arrested under Goondas act in Chennai. Police in a statement have said this.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக