வெள்ளி, 24 ஜூன், 2011

பீகாரைச் சேர்ந்த 14 குழந்தை தொழிலாளர்கள் சேலம் ரயில் நிலையத்தில் மீட்பு


பீகாரைச் சேர்ந்த 14 குழந்தை தொழிலாளர்களை பெங்களூருல் உள்ள பிஸ்கட் பேக்கரியில் வேலைக்கு சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு கூலியும், உணவும் ஒழுங்காக கொடுக்காத காரணத்தால், பீகாரில் உள்ள தங்களது உறவினர்களுக்கு குழந்தை தொழிலாளர்களில் ஒருவர் போன் செய்துள்ளார்.

பீகாரில் உள்ள குழந்தைகளின் உறவினர்களுக்கு தெரிந்தவர்கள் சிலர் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை செய்துள்ளனர். அவர்களுக்கு தகவல் கொடுத்ததன் பேரில், திருப்பூரில் இருந்து ஒருவர் பெங்களூர் சென்று, அங்கிருந்த குழந்தைகளை பேக்கரியில் அனைவரும் வேலையை முடித்துவிட்டு தூக்கியபோது, யாருக்கும் தெரியாமல் ஒரே நேரத்தில் 14 குழந்தைகளையும் தப்பிக்க வைத்து வெளியில் அழைத்து வந்துள்ளார்.

24.06.2011 அன்று காலை பெங்களூரில் இருந்து சேலம் ரயிலில் வந்த அவர்கள், சேலம் ரயில் நிலைய நடைமேடையில் தங்கியுள்ளனர். அப்போது கோவையைச் சேர்ந்த சைல்டு லைன் அமைப்பாளர் ஒருவர் இந்த குழந்தைகளை பார்த்துள்ளார்.

சேலம் சைல்டு லைன்க்கு தகவல் கொடுத்த அவர், தமிழ் தெரியாத 14 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் மீது சந்தேகம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

சேலம் சைல்டு லைன் தலைவர் அமல்ராஜ், ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரின் உதவியுடன் அந்த குழந்தைகளை விசாரித்துள்ளார். அப்போது மேற்கண்ட விபரம் தெரிய வந்துள்ளது. அவர்கள் அனைவரும் 2306.2011 அன்று காலை உணவு அருந்தியுள்ளனர். பட்டினியால் வாடிய அவர்களுக்கு உணவு வழங்கி, சேலம் அன்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

மாவட்ட ஆட்சியர் மூலம் பீகார் அரசுடன் தொடர்பு கொண்டு, 14 குழந்தை தொழிலாளர்கும் அவர்களுடைய பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக