ஞாயிறு, 22 மே, 2011

சத்யசாயி பாபா! இதை அப்பாவுக்கு (கலைஞர்) தாங்க’’ அப்டீன்னு சொல்லியிருக்கார்.



nakkeeran : அந்த மகானைப் பத்தி நினைக்கிறப்போ கண்ணு மட்டுமில்லே, மனசும்கூட தளும்புது! நம்ம தமிழ்நாட்டு மக்களோட பல நாள் தாகத்தைத் தீர்க்கிறதுக்காக கிருஷ்ணாநதி நீரை, ஆந்திராவிலிருந்து இங்கே கொண்டு வர, தானே முன் வந்து ஏற்பாடு செஞ்சு தந்த மாபெரும் நல்ல உள்ளம் படைச்ச மகான் அவர்!.. நான் மட்டுமில்லே, எங்க வீட்டுக்காரங்களும்கூட பாபா பேர்ல பயங்கர அன்பும் மரியாதையும் வச்சிருக்காங்க...

பாபா மறைஞ்ச செய்தி கேள்விப்பட்டதும் நம்ம தமிழக அரசு சார்பாகவும், தன் தனிப்பட்ட அன்பு காரணமாகவும் இவங்க, உடனே புட்டபர்த்தி போய் பாபாவுக்கு இறுதி அஞ்சலி பண்ணிட்டு வந்தாங்க... எனக்கும் எங்க வீட்டுகாரங்களோட கூடவே போய் பாபாவோட இறுதி நிகழ்ச்சியில் கலந்துக்கணும்னு ரொம்ப விருப்பமாத்தான் இருந்தது. ஆனா அப்பத்தான் என் மருமக கிருத்திகாவுக்கு குழந்தை பிறந்தது அப்பிடிங்கிறதாலேயும், இவங்க ரொம்ப அவசரமா கிளம்பிப் போயிட்டு வர வேண்டி இருந்ததாலேயும் என்னால அவங்ககூட போக முடியலே!

எங்க வீட்டுக்காரங்க அங்கே போயிருந்த அந்த நேரத்தில் நான் சாயிபாபாவை பத்திதான் ரொம்ப நினைச்சுட்டு இருந்தேன்.

எவ்வளவு விஷயங்களை ஜனங்களுக்காக,அவங்க நன்மைகளுக்காக செஞ்சிருக்கார் பாபா!

எவ்வளவு பேர் அவரை உணர்வுபூர்வமா அப்பிடியே கடவுளாகவே பார்த்துக் கும்பிட்டுட்டு இருக்காங்க!

எனக்கு சமீப சில வருஷங்களாத்தான் பாபாவைப் பத்தி நெருக்கமா தெரிஞ்சுக்க முடிஞ்சது.. அவரை நேரிலேயும் பார்க்க முடிஞ்சது!

அதுக்கு முன்னால எல்லாம் எனக்கு பாபா பத்தி பெரிய அபிப்ராயம் ஏதும் இருந்ததில்லை.

நான் கோயிலுக்குப் போவேன்... சாமி கும்பிடுவேன்... விரதம் இருப்பேன்.. ஆனால் ஆன்மிகத்தில் தனிப்ப ட்ட மனிதர்களை கொண்டாடறதில் எனக்கு அவ்வளவா ஆர்வமோ விருப்பமோ இருந்ததில்லை அப்பிடிங்கிறதால், சத்தியசாயிபாபா பத்தியும் எனக்கு பெரிய அபிப்ராயம் இல்லை. நான் ஷீரடியில் பாபா கோயிலுக்கு மட்டும் போயிருக்கேன். சென்னையில் இருக்கற பாபா கோயிலுக்கும் போவேன்.

ஆனா என் தங்கைகள் சாருமதி, ஜெயந்தி ரெண்டு பேருக்கும் சத்திய சாயி பாபான்னா அப்பிடியொரு பக்தி. என் தம்பியான டாக்டர் ராஜமூர்த்தியும், பாபா ‘இப்படிப் பண்ணார், அப்படிப் பண்ணார், இத்தனை பெரிய விஷயம் பண்ணியிருக்கிறார்’னு எப்போ பார்த்தாலும் சிலிர்ப்போட ஏதாவது சொல்லிட்டே இ ருக்கும்..

‘‘நீயும் வாயேன்!... பார்த்துட்டு வரலாம்’’னும் என்னையும் தம்பி கூப்பிடும்! ஆனா எனக்கு அவ்வளவு தூரம் மெனக்கெட்டு போய் நேரில் பாபாவை பார்க்கவோ, பேசவோ தோணினதில்லே!

அதான் டி.வி.யிலேயும்,புத்தகத்திலேயும் அவர்பத்தி நிறையப் பார்க்கிறோம், படிக்கிறோம்... நேரில் போய் பார்க்கிற அளவுக்கு என்ன இருக்குன்னு நான் அவங்க கூப்பிடறப்போ எல்லாம் பெரிசுபடுத்திக்காம விட் டுடுவேன்.

எது ஒண்ணையும் அதோட பக்கத்தில போயி உணர்ந்து பார்க்கிறப்போதான் அதோட உண்மையான மதிப்பு தெரியும்னு சொல்வாங்களே... பாபா பத்தியும் எனக்கு அதுபோலத்தான் தெரிய வந்தது.

கிருஷ்ணா நதி நீர் விஷயமா பேச பாபா கோபாலபுரம் வந்தப்போ கூட நானும், எங்க வீட்டுக்காரங்களும் அங்கே போக முடியாதபடி ஒரு சூழ்நிலை ஆயிடுச்சு!

காரணம்,அதுக்கு ரெண்டு வாரம் முன்னாடிதான் எங்க வீட்டுக்காரங்களுக்கு ஒரு சின்ன விபத்து ஏற்ப ட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தோம்.

வேறொண்ணுமில்லே... எங்க பையன் உதயாவும் மருமக கிருத்திகாவும் தங்களோட கைக்குழந்தை இன் பனை விட்டுட்டு அப்போ வெளியூர் போயிருந்தாங்க... குழந்தை முதன்முதல்ல அம்மாவைப் பிரிஞ்சு அ ழுதுட்டே இருந்தது. அந்த சமயம் மகாபலிபுரத்தில் நாட்டியாஞ்சலி விழாவுக்கு இவங்க போக வேண்டி இருந்தது. பேரனையும் தூக்கிகிட்டு முதல் நாள் ராத்திரியே போய் அங்கே தங்கியிருக்கலாமேன்னு அங்கே ஜி.ஆர்.டி. ஹோட்டல்ல தங்கினோம்.எங்க வீட்டுக்காரங்க பேரக்குழந்தையோட விளையாடறேன்னு ஜாலியா குழந்தையைத் தூக்கிட்டு ரெண்டு தென்னை மரத்துக்கு இடையில் கட்டப்பட்ட நெட் படுக்கையில் படுக்கலாம்னு ஏற, அது அப்பிடியே புரட்டி விடவும் கீழே குழந்தையோட அப்பிடியே விழுந்துட்டாங்க...

நல்லவேளை குழந்தைக்கு அடிபடலே... அது இவங்க பிடியில இவங்க மேலேயே பாதுகாப்பா விழுந்தி ருந்தது. இவங்கதான் மல்லாக்க அப்பிடியே பொத்துன்னு கீழே விழுந்து முதுகில் நல்ல அடி...

நான் குழந்தைக்கு ஏதும் அடிபட்டிருக்குமோன்னு பயத்தில் ஓடிப்போய் குழந்தையைத் தூக்கிட்டேன். இவங்களாலதான் எழுந்து நிக்க முடியலே... அப்புறம்தான் நானே இவங்களைப் பிடிச்சு தூக்கி நிறுத்தி அப்படியே படுக்கையில் படுக்க வச்சேன்.

வலிகிலி இருந்தாலும் நல்லா மசாஜ் பண்ணி விட்டா சரியாயிடும்னு ஓவரான் ஆயின்ட்மெண்ட் வச்சு ந ல்லா இவங்க முதுகில் அடிபட்ட இடத்தில் தேச்சு விட்டேன்.

அதுக்குள்ள என் பொண்ணு செந்துவும் மருமகனும் வந்துட்டாங்க. ராத்திரியெல்லாம் தூக்கமே இல்லாம வலி வலின்னு இவங்க கத்த ஆரம்பிச்சுட்டாங்க. பெயின் கில்லர் மாத்திரை கொடுத்தும் வலி குறையலே. அப்புறம்தான் சரி, இது ஃப்ராக்சரா ஏதாவது இருக்கும்னு தோணுச்சு!...

மறுநாள் காலையில நேரா ராமச்சந்திரா ஆஸ்பத்திரிக்கு இவங்களைக் கூட்டிட்டுப் போனாங்க, எங்க பொண்ணும் மாப்பிள்ளையும்.

முதுகெலும்பில் ஹேர் லைன் ஃப்ராக்சர்னு சொல்லிட்டாரு டாக்டர். மார்த்தாண்டம் டாக்டர் தான் பார்த்தார். இப்போ அவர் இல்லை. 2 நாள் அங்கேயே தங்க வச்சு ட்ரீட்மெண்ட் தந்தாங்க.அப்புறம் வீட்டுக்கு அனுப்பிச்சுட்டாங்க. ஆனா வீட்லேயும் இவங்க அப்படியே மல்லாக்க அசையாம படுத்திருக்கணும்... அதான் ட்ரீட்மெண்ட்னு சொல்லிட்டாங்க... அப்போ நாங்க அமைச்சர்கள் குடியிருப்பான ‘குறிஞ்சி’யில் கு டியிருந்தோம். அப்படி இவங்க அசையாம படுத்திருக்கற நிலையிலதான் கோபாலபுரம் வீட்டுக்கு சத் தியசாயிபாபா வந்திருக்கார்...

என் தங்கச்சிங்க ரெண்டு பேரும் கூட அத்தைகிட்டே பர்மிஷன் வாங்கிட்டு ‘நாங்களும் பாபாவைப் பார்க்க வர்றோம் அத்தே!’ன்னு கேட்டுட்டு போயி கோபாலபுரத்தில் அவரை அன்னிக்கு பார்த்திட்டு வந்தி ருக்காங்க.... அவங்க அந்த அனுபவம் பத்தி திரும்ப சொல்லச் சொல்ல எனக்கு ‘அடடா... அந்த சமயம் நாம வீட்ல இல்லாமல் போயிட்டோமே!’ன்னு ரொம்ப வருத்தமா இருந்தது.

பாபா, கோபாலபுரம் வீட்டுக்கு வந்துட்டுப் போனதுக்கு அடுத்த நாளே, அவர் தந்த கிருஷ்ணா நதிநீருக்காக தமிழகம் சார்பா நன்றி தெரிவிக்க ஒரு பெரிய பொதுக் கூட்டம் நடந்தது.

எங்க வீட்டுக்காரங்க அப்படி மட்ட மல்லாக்கக் கிடந்த நிலையிலும் ‘நான் அந்தக் கூட்டத்துக்குப் போய் பாபாவுக்கு நன்றி சொல்லியே ஆகணும்’னுட்டாங்க. அவரது அமைச்சக துறையின் கீழே தான் இந்த விஷயங்கள் வருது அப்டீங்கிறதால் நேரில் பார்த்து பாபாவுக்கு நன்றி சொல்லாம இருந்தா அது சரியான நடவடிக்கையா இருக்காதுன்னு எங்க வீட்டுக்காரங்க ரொம்ப ஃபீல் பண்ணினதாலதான் கட்டாயம் போகணும்னு துடிச்சாங்க.

டாக்டருங்க தடுத்தும் இவங்க கேட்கலே. அப்புறம் முதுகில் ஒரு பேடு வச்சு கட்டி இவங்களை பாதுகாப்பா அனுப்பிச்சாங்க. அப்பிடியேதான் இவங்க அந்தக் கூட்டத்துக்கும் வந்திருந்தாங்க.

இதுபோல அடிபட்ட விஷயம் சொல்லி மாமா இவங்களை பாபாவுக்கு அறிமுகப்படுத்த, ‘முதுகில வலி எப்படியிருக்கு’ அப்டீன்னு அன்பா விசாரிச்சிருக்கார் பாபா!அதுக்கப்புறம் ஒரு தடவை எங்க வீட் டுக்காரங்களும், அமைச்சர் துரைமுருகனும் புட்டபர்த்தி போனப்போவும் பாபா, எங்க வீட்டுக்காரங்களைப் பார்த்து ஞாபகமா ‘முதுகுவலி இப்போ சரியா போச்சா?’ அப்டீன்னு அன்பா விசாரிச்சிருக்கார்.

அதுக்கப்புறம் நாங்க ரெண்டு மூணு தடவை புட்டபர்த்தி போயிட்டு வந்தப்போகூட அதே அன்போட பேசுவார்! அதென்னவோ எங்க வீட்டுக்காரங்களை எப்போ பார்த்தாலும் பாபா ஸ்பெஷலா ஒரு புன்னகை பண்ணுவார்.

பாபா பத்தி எனக்கு நிறைய விஷயங்கள் எடுத்துச் சொன்னது மல்லிகா சீனிவாசன்தான். டி.வி.எஸ். நிறுவனத்தைச் சேர்ந்த வேணு சீனிவாசனோட மனைவிதான் இவங்க. சிம்சன், டஃபே நிறுவனங்களை நிர்வகிக்கிறாங்க. மெட்ராஸ் சேம்பர் ஆஃப் காமர்ஸோட பிரசிடெண்டா இருந்த முதல் பெண்மணியும்கூட.

மல்லிகா சீனிவாசன் பாபாவோட படு தீவிர பக்தை. அவங்க வீட்டுக்காரங்க வேணு சீனிவாசனும் பாபாவோட தீவிர பக்தர் இவங்க அடிக்கடி பாபாவை தரிசிக்க புட்டபர்த்தி போயிட்டு வருவாங்க.

எங்க வீட்டுக்காரங்களும் நானும் டி.வி.எஸ். நிறுவனத்துக்குச் சொந்தமான குட்டி விமானத்தில் இவங்களேடதான் கிளம்பி பாபாவை சந்திக்க புட்டபர்த்திக்குப் போனோம்.

‘நீயும் வா... வந்து நேர்ல அவர் செய்ற நல்ல விஷயங்கள் எல்லாம் பாரு. மல்லிகா சீனிவாசனும் வரு வாங்க.நீ அவங்களோட பேசிட்டே வரலாம்’னு எங்க வீட்டுக்காரங்க என்னையும் கூடவே கூப்பிட்டுப் போனாங்க.

போற வழியெல்லாம் மல்லிகா சீனிவாசன் பாபா பத்தி நிறைய விஷயங்கள் சொல்லிட்டே வந்தாங்க. கேட் கக் கேட்க மலைக்க வைக்கும்படியா இருந்தது. படிப்புல, தொழில்ல, நிர்வாகத்தில அவ்வளவு உயரத்தில இருக்கிற மல்லிகாவும், அவங்க வீட்டுக்காரங்களும் பாபா மேல இவ்வளவு உயரிய பக்தியும், அபிமானமும் வச்சிருக்கிறதைப் பார்த்து நான் பிரமிச்சுத்தான் போயிட்டேன்.

நேர்ல புட்டபர்த்தி போய் பார்த்தப்போ என் பிரமிப்பு பல மடங்காயிடுச்சு!
எத்தனை பேருக்கு மருத்துவ உதவிகள்! எத்தனை பேருக்கு படிப்பு! எத்தனை பேருக்கு வாழ்க்கை!! லட் சக்கணக்கில் பணம் வாங்கும் தனியார் மருத்துவமனையில்கூட இத்தனை சுத்தம் இருக்காது. இங்கே ஒரு பைசா செலவில்லாமல் மருத்துவம் செய்ற பாபாவோட ஆஸ்பத்திரி அப்படியே கண்ணாடி போல மின்னுது. ஆஸ்பத்திரி தரையும் சுவரும்கூட! ஆஸ்பத்திரி மட்டுமில்லை. அத்தனை லட்சம் பேர் கூடுற புட்டபர்த் தியில் பாபா சம்பந்தப்பட்ட ஒவ்வொரு இடமுமே பளிச்னு அத்தனை சுத்தமா இருக்கு! மெத்தப் படிச்சவங்ககூட விரும்பி வந்து சுத்தப்படுத்தற வேலையை செய்றாங்க. டாக்டருங்க விரும்பிப் போயி அங்கே இலவசமா மருத்துவம் பார்க்கிறாங்க!

எத்தனை பேருக்கு படிப்பு! அதுவும் எத்தனை வகையான உயரிய படிப்பு! பார்க்கப் பார்க்க பரவசமாகத் தான் இருந்துச்சு!

பாபாவோட தரிசனத்துக்காக லட்சக்கணக்கில் மக்கள் வந்து எப்பிடி கொஞ்சம்கூட சத்தம் இல்லாம உட்கார்ந்திருக்காங்க.எப்பிடி கொஞ்சம்கூட சத்தம் இல்லாம கலைஞ்சு போறாங்க அப்டீங்கிற ஒழுங்கே பார்க்க ஆச்சரியமூட்டுச்சு!

நாங்களும் பாபாவைப் பார்க்கிறதுக்காக அன்னிக்கு பிரசாந்தி நிலையத்தில் உட்கார்ந்திருந்தோம். அங்கே பெண்கள் தனி இடம், ஆண்கள் தனி இடம்... எங்க வீட்டுக்காரங்க மத்த ஆம்பளைங்களோட போயி உட்கார, நானும் மல்லிகா சீனிவாசனும் ஒண்ணா உட்கார்ந்தோம்.

பாபா ஒரு வீல் சேரில் உட்கார்ந்தபடி அப்படியே கூட்டத்தைப் பார்த்து புன்னகை செஞ்சுட்டு கையாட்டி ட்டே போனார்.

‘அவர் பேசமாட்டாரா?’ன்னு நான் மல்லிகாவைக் கேட்க,
‘‘அவர் அதிகம் பேச மாட்டார். எப்பவாவது தோணுச்சுன்னா சிலர் கிட்டே மட்டும் பேசுவார்.இவர் கருணைப் பார்வை தன் மேல் பட்டாலே போதும்னு நினைச்சுட்டு வர்றவங்கதான் இந்த லட்சக்கணக்கான பேரும்!’னு சொன்னாங்க அவங்க.

எங்க பக்கத்தில பாபா வரும்போது, மல்லிகா குனிஞ்சு, ‘‘ஒரு வேளை பாபா உங்ககிட்டே பேசினா பேசுங்க... என்ன கேட்கணும்னு தோணுதோ கேளுங்க!’’ன்னாங்க அவங்க.

‘‘எனக்கு அப்பிடி எதுவும் கேட்கணும்னு தோணலியே!’’ அப்டீன்னேன் நான்.உண்மையில் எனக்கு எது வுமே பேசணும்னு தோணலே... அப்பிடியே அவரைப் பார்த்துட்டு இருக்கலாம்னுதான் இருந்தது.

‘அப்படியில்லே, எதுவானாலும் கேளுங்க!’ன்னாங்க அவங்க. அதன்படியே பாபா எங்க பக்கத்தில வந்ததும் என்னை அடையாளம் காண்ற மாதிரி எம் மேல நின்னுச்சு அவர் பார்வை.மல்லிகா சீனிவாசன் என் னை அறிமுகப்படுத்த ‘தெரியும்’னு மென்மையா சொன்னபடி என்னை ஆசீர்வாதம் செஞ்சார் பாபா.

உடனே நான், என்னையும் அறியாம எழுந்து அவர் கால்ல விழுந்து கும்பிட்டேன்.‘‘எங்க வீட் டுக்காரங்க இந்த சமூகத்துக்காக சேவை செய்யணும்னு நினைக்கிறாங்க. அதுக்கு அவருக்கு நல்ல ஹெல்த் வேணும்’னு நான் பாபாவை மனசுக்குள்ள கேட்டுகிட்டேன்.ஒரு மனைவியா என் தேவை அவ்வளவுதான்!

அந்த சமயம் புதுவருஷப் பிறப்பு நாளும் அதுவுமா முதுகுத் தண்டில் அடிபட்டு எங்க வீட்டுக்காரங்க ஆஸ்பத்திரியில் இருந்தது... திடீர்னு லண்டனுக்கு இவங்க செக்கப்புக்காக போக நேர்ந்ததுன்னு இவங்க ஹெல்த் பத்தி அப்போ எனக்கு மனசு நிறைய கவலை இருந்தது. பாபாவிடம் கேட்டப்புறம் எனக்கு மனசு நிம்மதியான மாதிரி ஒரு ஃபீலிங்!
இரண்டாவது முறையும் நாங்க மல்லிகா சீனிவாசன் தம்பதியோட தான் புட்டபர்த்தி போனோம். எங்களேட என் தங்கை ஜெயந்தியும் வந்திருந்தது. அப்போ புட்டபர்த்தியில் அரசாங்க விஷயமா கூவத்தை சுத் தப்படுத்தறது சம்பந்தமா பாபாவோட உதவியைக் கோரி இவங்களை மாமா புட்டபர்த்தி போகச் சொல் லியிருந்தார். பாபாவைப் பார்க்கணும்னு நானும்கூட சேர்ந்துகிட்டேன்.

இந்த ட்ரிப், ஹாஸ்பிடல்கள் எல்லாம் சுத்திப் பார்த்தோம். இலவச ஹாஸ்பிடல்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க! அவ்வளவு சுத்தம்!
ஆஸ்பத்திரியில் ஒரு நாளைக்கே அத்தனை ஆபரேஷன்கள் நடக்குது... எல்லாமே ஃப்ரீதான். புட்டபர்த் திக்குள்ளே நுழைஞ்சா சாப்பிடற சாப்பாடு உட்பட எல்லாமே ஃப்ரீதான்.

அதுக்கப்புறம் ரெண்டு முறை நாங்க பாபாவைப் பார்க்க புட்டபர்த்தி போனோம். பாபாவோட 85வது பிறந்த நாள் விழாவுக்காக போயி 2 நாள் அங்கே தங்கியும் இருந்தோம்.

நான் பாபா பத்தி எங்க வீட்டுல ரொம்ப சிறப்பா சொன்னதைப் பார்த்துட்டு எங்க மருமகனும் நாங்க 2வது முறை புட்டபர்த்தி போனப்போ எங்களோட வந்தார்!

கெஸ்ட் அவுஸில் எங்களுக்கு சாப்பாடு பரிமாறினதுகூட பெரிய பெரிய இன்ஜினீயர்ஸ், டாக்டர்ஸ்! நாங்க ஆச்சரியப்பட்டு விசாரிச்சா, ‘‘பாபாவோட இடத்தில நாங்க சேவை செய்ய கொடுத்து வச்சிருக்கணும்’’ கிறாங்க. சிலிர்ப்பா இருந்துச்சு.

அன்னிக்கு நடந்த பட்டமளிப்பு விழாவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் கூட வந்திருந்தார்.

நம்ம தமிழ்நாட்டுக்கு ஆந்திராவிலிருந்து கிருஷ்ணாநதிநீர் கொண்டு வர உதவினது மாதிரி இந்தியாவோட பல மாநிலங்களுக்கும் பாபா பல உதவிகள் சத்தமில்லாம செஞ்சிருக்கார்!

அன்னிக்கு மேடையில் பாபா தங்களோட மாநிலத்துக்குப் பண்ணின உதவிகளைப் பத்தி அந்தந்த மாநில த்தைச் சேர்ந்தவங்க பேச, நம்ம மாநிலம் சார்பா சென்னை மேயர் மா.சுப்ரமணியன் பேசி நன்றி தெரிவிச்சாங்க.

பாபாவோட 85வது பிறந்தநாள் சமயம் இந்தியாவோட பல வி.ஐ.பி.கள் உட்பட பெரிய கூட்டமா பலர் பாபாவுக்கு மலர்க் கொத்து தர வரிசையில் நின்னாங்க. எங்க வீட்டுக்காரங்க மலர்க்கொத்து தந்த சமயம், பாபா எங்க வீட்டுக்காரங்களைப் பார்த்து அதே போல் ஸ்மைல் பண்ணிட்டு இவங்க கன்னத்தையும் தட்டிக் கொடுத்தாங்க.

உடனே மல்லிகா, ‘‘பாருங்க, பாபா உங்க வீட்டுக்காரர் கன்னத்தைத் தட்றாரு! அவ்வளவு சீக்கிரம் யாரையும் பாபா தொட்டு அல்லது கன்னத்தைத் தட்டி பேசறதில்லை. யாரையாவது அவருக்கு ரொம்பப் பிடிச்சாதான் நெருக்கமா வந்து கன்னத்தைத் தட்டி பேசுவாரு! உங்க வீட்டுக்காரரை பாபாவுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு!’’ அப்டீன்னு ரொம்ப சந்தோஷமா சொன்னாங்க.

எனக்கும் அப்பிடித்தான் தோணுச்சு.அவ்வளவு நல்ல ஒரு மகானோட மனசுல ஒரு இடம் பிடிக்க முடிஞ்சுது உண்மையில எங்களோட பாக்கியம்தான்.

நாங்க முதல் தரம் பார்க்கப் போனப்போ, பாபா எங்க வீட்டுக்காரங்களுக்கு ஒரு நவரத்தின மோதிரம் தந் தாரு.

பாபாவோட பிறந்த நாள் சமயம் நாங்க போனப்போ எங்க வீட்டுக்காரர் கையில ஒரு செயின் தந்து, ‘‘இதை அப்பாவுக்கு (கலைஞர்) தாங்க’’ அப்டீன்னு சொல்லியிருக்கார்.எங்க வீட்டுக்காரரும் அதைத் தன் அப்பாகிட்டே தந்தார்.மாமா செயின் எதுவும் போட்டுக்கமாட்டார் அப்டீங்கிறதால அந்தச் செயினை அப்புறம் அத்தை (தயாளு அம்மாள்) கிட்டே தந்துட்டாங்க இவங்க.

உண்மையில் பாபாவைப் பார்த்த பிறகு அவர் செய்ற பல நல்ல செயல்களைப் பார்த்த பிறகு, அடடா இவரை முதலிலேயே பார்க்காமல் போய்விட்டோமே என்று தோணுச்சு!

ஜாதி, மதம், பணம், அந்தஸ்துன்னு பேதமில்லாமல் அவர் எல்லோரையும் ஒரே மாதிரி நடத்துவதும் ஆச்சரியப்படுத்திடுச்சு.

பாபா இப்பிடி விபூதி வரவழைத்துத் தருவார், அப்படி அதை வரவழைத்துத் தருவார்ங்கிற கான் ட்ரோவர்சிகளை விடுங்க.ஆனா இவ்வளவு நல்ல மனசோடு, இவ்வளவு நல்ல நோக்கங்களோடு இத்தனை பேருக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவிய அந்த உயரிய மனசும்,அந்தக் கருணையும் இ ருக்கிறதே. அதை வைத்தே சொல்லலாம், இவர் மனித உருவில் வந்த தெய்வம்னு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக