ஞாயிறு, 29 மே, 2011

Jaffna Hospital பாவனைக்கு உதவாத வடைகள் பொதியுடன் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன

யாழ்.போதனா வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையில் பாவனைக்கு உதவாத நிலையில் இருந்த வடைகள் பொதியுடன் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.

கடந்த சில காலமாக இந்தச் சிற்றுண்டிச் சாலையில் சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருள்கள் இருந்தமை குறித்து வைத்தியசாலை சுகாதார பரிசோதகர் எச்சரிக்கை செய்திருந்தார்.

உணவு உற்பத்தி செய்யும் பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் அனுமதி அட்டையை ஒரு வாரத்தினுள் சமர்ப்பிக்கும்படியும் அவர் கூறியிருந்தார்.

இதுவரை அவர்கள் அதைச் சமர்ப்பிக்கவில்லை. இந்த நிலையில் சுகாதார முறைப்படியான பாதுகாப்பற்று அசுத்தமான முறையில் பையினூடாக எண்ணெய் ஊறிய நிலையில் நேற்று முற்பகல் 10 மணியளவில் சிற்றுண்டிச்சாலைக்கு விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்ட வடைகள் அனைத்தையும் யாழ். போதனா வைத்தியசாலைச் சுகாதாரப் பரிசோதகர் முரளிதரன் கைப்பற்றி அழித்துள்ளார்.

ஏற்கனவே சிற்றுண்டிச்சாலை உணவுகளில் சுகாதாரக் குறைபாடுகள் இருப்பதாக மக்கள் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக